டிசம்பரில் 43
வது பசுமைநடை சித்தர்மலை என அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். ஏனெனில் சென்ற முறை
பசுமைநடையில் சித்தர்மலையின் உயரத்தினையும் தூரத்தினையும் கணக்கில் கொண்டு செல்லவில்லை.
தற்பொழுது காலை நடைப்பயிற்சி மூலம் கொஞ்சம் ஸ்லிம்மாக மாறி இருப்பதால் இந்த பரிசோதனை
முயற்சியில் ஈடுபட துணிந்தேன். சித்தர்மலையின் சிறப்பாக மலை மேல் சிவன் கோவில் இருப்பதாக
கூறினர். சித்தன் போக்கு சிவன் போக்கு என கேள்வி பட்டிருக்கின்றேன். என்ன பெயர் எல்லாம்
ஒத்து போகின்றதே என நினைத்தேன். சமணப்படுகைகளும் அமைந்துள்ளதாக அறிந்து மதுரையின் முக்கிய
தளத்திற்கு செல்வதினை உணர்ந்தேன். சிவனடியார்கள் இங்கு சித்தர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்களா?
அல்லது சமணர்களை சித்தர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்களா? சென்று தான் பார்போம்.
என கிளம்பினேன். திருமங்கலத்திலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வயல்வெளி, கண்மாய்களை
கடந்து இரு சக்கர வாகன உதவியுடன் செக்கானூரனியை
அடைந்தோம்.
மதுரையிலிருந்து வரும் பசுமைநடையினர் பல்கலைகழக வாசலில்
குழும்பியிருப்பதாக தகவல் வந்தது. செக்கானூரனி கடைகளில் அதிவேக விற்பனை கல்லா கட்டிய
ஜோரு ஞாயிற்றுகிழமை காலை என்பதனை நினைவுப்படுத்தியது.