மலையும் மலை சார்ந்த
பகுதியை காண்பது என்றால் மகிழ்ச்சி தான்.
6000ம் ஆண்டுகால
தள வரலாறும் , ஆறு விதக் கடவுள்
வழிபாடும் எட்டு கல்வெட்டுகளும் ஒருங்கே
இணைந்த அதிசய மலை
தேவன்குறிச்சி
. மேற்கு
தொடர்ச்சி மலைகளின் அழகில்
இது அழகிற்கு அழகு சேர்க்கக்கூடியது.
இம்மலை
மதுரையிலிருந்து
சுமார்
40கிமீ தூரத்தில்
அமைந்துள்ளது. மதுரை
, திருமங்கலம், தே.கல்லுப்பட்டி வழியாக
பேரையூர்
செல்லும் வழியில் அமைந்துள்ளது. தே.கல்லுப்பட்டி என்னும்
ஊரின்
பெயரில் தே என்பது தேவன்குறிச்சி யையே குறிக்கும்.
சூழல் உலாவின் சமீபத்திய பயணமான தேவன் குறிச்சி (குறிஞ்சி) யின் மறக்கவியலா பயணக்குறிப்புகள்
தங்களின் இனிய பார்வைக்கு…
ஆறு கடவுள் வழிபாடு.
“ஸ்ரீ அக்னீஸ்வரர் கோமதி
அம்மன் கோயில்” என்ற
வரவேற்பு நுழைவாயில் நுழைந்தால் இடது புறம் நடுகல் வழிபாடும் நடைபாதைக்கு நேராக புதிதாக அமைக்கப்பட்ட விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது.