Thursday 27 July 2017

மண்டையோட்டுப் பூச்சி-2


சென்ற கட்டுரையில் அந்துப்பூச்சிகள் பற்றி நிறையவே தெரிந்து கொண்டோம். இப்போ மண்டையோட்டு அந்துப்பூச்சி பற்றி பார்ப்போமா? வண்ணத்துப்பூச்சிகளில் (PLAIN TIGER) புலி உருவம் இருப்பது அனைவரும் கண்டிருப்போம். மேலும் அரிய வகையாக நாய் உருவம், உலக வரைபடம், சிலுவை, மனித கண்கள் போன்ற உருவங்கள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.
அதுபோல அந்துப்பூச்சியில் மண்டையோடு, ஆந்தை போன்ற உருவங்கள் கொண்டவை உள்ளன. ஆனால் இவைகளை பார்ப்பது மிகுந்த அபூர்வம். மண்டையோட்டுப் பூச்சியை ஆங்கிலத்தில் லெப்பிடோப்டெரா (lepidoptera)  வகை பூச்சி என அழைப்பர். மண்டையோட்டுப் பூச்சி  பார்க்க பட்டுப் பூச்சியை போன்றே இருக்கும்.

பறவைகள் போல் மண்டையோட்டு அந்துப்பூச்சியும் வலசை செல்கின்றன. மத்தியகிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லண்டன், சீனா, ஜப்பான், பாகிஸ்தான் ,பங்களாதேஷ்,வியாட்நாம், மலேசியா , தாய்லாந்து போன்ற பகுதிகளில் அபூர்வமாக தென்படுகின்றன.

Tuesday 25 July 2017

மண்டையோட்டுப் பூச்சி-1

கோலிவுட்டில் பேய்கள் சீசன் களைகட்டுகின்றது. நம் பங்கிற்கு நாமும் கொஞ்சம் த்ரில்லர் கம் மெசேஜ் கொடுப்போம்னு ஒரு முயற்சி. முன்பு எல்லாம் பேய் படங்களில் முன்னணி கதாநாயகிகள் நடிப்பதில்லைஆனால் தற்பொழுது நயன்,திரிஷா,ஹன்சிகா போன்ற  நமது  கனவுகன்னிகள் பேய்களாக வளம் வருகின்றனர். ஆம் நம் கோலிவுட் கடவுளின் நிலைக்கு சென்று விட்டது. எப்படி என்கிறீர்களா? பீடிகை போடவில்லை. தொடர்ந்து படியுங்கள். எலும்புக்கூடு பயம் என்பது இப்பொழுது மட்டுமல்ல. பள்ளி படிப்பு காலத்திலேயே துவங்கி விடும். பள்ளியில் சைன்ஸ் லேப்பை தாண்டும் பொழுதெல்லாம்  இதயம் படபடக்கும். உள்ளே உள்ள எலும்புக்கூடு  பலநாள் தூக்கத்தினை கெடுத்துள்ளது பலருக்கு. அபாய அறிவிப்புகளுக்கு மண்டையோட்டு படங்களை பார்த்திருப்போம். வீட்டில் கரப்பானுக்கே பயப்படும் பெண்கள் மண்டைஓடு படத்தினை பார்த்தால் நடுங்கி தான் போவர். இப்படி குலைநடுங்கச் செய்யும் மண்டையோட்டினை உடைய பூச்சியினை பார்த்திருக்கின்றீர்களா? சரி  கேள்வியாவது பட்டிருக்கின்றீர்களா?

Sunday 30 April 2017

கோடைக் கொண்டாட்டம்

எனது பள்ளி,கல்லூரிக்கால பழைய பொக்கிஷங்களை பாதுகாக்கும் பெட்டகம் ரங்கூன் டிரக்பெட்டி.. எனது தாத்தாவின் அப்பா பிரத்யோகமாக உபயோகித்து பர்மாவிலிருந்து கொண்டு வந்தது இப்பெட்டி. பெட்டியை அண்டாக்கா கசம் அபூக்கா ஹூக்கும் என திறந்தால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புத்தகத்திற்கு வழங்கும் பளபளக்கும் வண்ணப்படங்களில் பீலே, மரடோனாவின் காட்சிஇருவரும் 3டி ஸ்டைலில் கால்பந்து உதைக்க டிரக் பெட்டியை விட்டு வெளியே வந்து பல பழைய நினைவுகளை நினைவுறுத்தின. இனிப்பான  கேசரியை கிளறி முந்திரியை தேடி எடுத்து உண்பது போன்றது நம் நல்ல பல பழைய நினைவுகளை அசைபோடுவது.