திருமங்கலம் இலக்கியப்பேரவை
சார்பாக “இலக்கியத்தில் நட்பு” என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்தனர். அதில் என்னையும்
சேர்த்து பலர் இதே தலைப்பில் பேச இருப்பதாக கூறினர். நட்பு என்ற தலைப்பில் பலருடன்
ஒருவராக பேசுவது என்றவுடன் தயங்கினேன். பின்பு அனைவரும் பேசும் தலைப்புகளை பார்த்த
பொழுது ஆண் பெண் நட்பு குறித்த இலக்கிய உரை
இல்லாதது கண்டேன். இன்று நாம் நவநாகரீக தேவைகள் அதிகம் உள்ள உலகத்தில் வாழ்கிறோம்.
இது குடும்பத்தில் ஆண் பெண் இருவரும் பணம் ஈட்ட வேண்டிய தருணம். இதில் பெண்கள் நாளும்
பல குணாதிசிய ஆண்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களுக்கிடையே எப்படி நட்பு கொள்வது மற்றும் நட்பினை தொடர்வது
என்று அவசியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதை மனதில் கொண்டு “நேருவின் நட்பு”
என தலைப்பில் பேசுவதாக பெயர் கொடுத்து உரையாற்றினேன். அதன் தொகுப்பினை கட்டுரையாக நமது
உழைப்பாளி தளத்தில் வெளியிடுகிறேன். படித்து கருத்துரையிடவும்.
Friday 13 November 2015
Tuesday 10 November 2015
சமணம் தந்த தீபாவளி
இந்தியாவிலிருந்து தன் கொள்கைகளால் உலகம்
கவர்ந்தவர்கள் ஒரு சிலரே. அதில் மகாவீரர் குறிப்பிடத்தக்கவர். தமிழகத்தின் மலைகள்
தோறும் மகாவீரரின் சிலைகளை காணலாம். இவர் சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கராவார். இவர்
சமண சமயத்தின் உள்ளடக்க கருத்துகளை வழங்கிய சீர்திருத்தவாதியாகும். மகாவீரர் வர்த்தமானர்
என அழைக்கப்பட்டார். பீகார் மாநிலம் வைசாலி அருகே உள்ள குந்திகிராமா என்ற நாட்டின்
இளவரசராக பிறந்தார். அரசன் அரசியான சித்தார்தர் திரிசாலாவின்
செல்லக்குழந்தையாய் வளர்ந்தார். தனது 30வது வயதில் அரசாட்சி துறந்தார்.
Subscribe to:
Posts (Atom)