கிட்டன்ஸ் காலி 3டி வள்ளி
சிறுபூனைக்காலி முப்பரிசவள்ளி
கடன்பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன். கம்பன் கடன் எவ்வளவு கலக்கம் கொடுக்கும் என்பதை உணர்ந்து
எழுதியுள்ளான். கலக்கம் கொடுப்பதால் தானோ என்னவோ கக்கா போற மேட்டருக்கும் காலைக் கடன் என பெயர் வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இன்றும்
கிராமங்களில் அதிகாலையில் செம்புடன் வயங்காட்டை நோக்கி படையெடுக்கும் கூட்டம் எந்த
கடனை அடைக்கா விட்டாலும் காலைக் கடன் அடைப்பை அகற்றி விட்டே வீடு திரும்பும். நடிகர் கவுண்டமணி சொல்வது போல் நிலத்திற்கு உரம்
போடும் பணியில் தான் தற்பொழுது பலருக்கும்
பல பிரச்சனைகள். ஒருசிலருக்கு மலச்சிக்கல் என்றால் மற்றொரு சாராருக்கு வயிற்றுப் போக்கு
என போக்கு காட்டுகிறது கக்கா மேட்டரு.