பண்டிகை என்றாலே பலவகை உணவுகளை ஃபுல் லோடு கட்டுவது நம் பழக்கம். தற்பொழுது
பண்டிகைகளில் பண்டங்களுடன் பாட்டில்களையும் (மது) ஃபுல்லாக காலி செய்வது புதிய வழக்கமாக மாறி வருகிறது. ஆனால் இங்கே நாம் கூறும் புள்,
பறவையாகும். பருந்திற்கு தன் தசை கொடுத்து புறாவை காப்பாற்றிய
சிபி சோழனையும், மயிலுக்கு போர்வை தந்து உதவிய பேகனையும், பறவைகள்
, பயம் கொள்ளக்கூடாது என்பதற்காக தேரின் மணிகளை
கழட்டி விட்டு பயணித்த தலைவர்களையும் பெற்றது நம் தமிழகம். இவ்வகையான பாரம்பரியத்தில்
வந்த நம் தமிழ் பறவை ஆர்வலர்கள் திண்டுக்கல், கோவை என்ற வரிசையில் கடந்த மாதம் திருநெல்வேலியில் பி.எஸ்.என் கல்லூரியில் தங்களது மூன்றாவது ஆண்டு சந்திப்பை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில்
ஊருக்கே உரிய வகையில் பல இனிப்பான செய்திகள் கிடைத்தன.