Friday 25 January 2013

கோடீஸ்வர விளையாட்டு


 கோடீஸ்வர  விளையாட்டு


இந்திய அரசியலில் ஈடுபட தற்போதைய தகுதி என்பது முதலில் கோடீஸ்வரராகவும் கிரிமினலாகவும் இருத்தலே சால சிறந்தது.  குஜராத் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 182 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் அதாவது மொத்தம் 134 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் சொத்து குறித்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி குஜராத் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 182 உறுப்பினர்களில் 134 பேர் கோடீஸ்வரர்கள்.

அதாவது 74 சதவீதம் பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்கள். கடந்த சட்டசபையில் 31 சதவீதம் பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்தனர். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்களில் 46 பேர் தொழிலதிபர்கள். 16 பேர் ரியல் எஸ்டேட் அதிபர்கள். கோடீஸ்வர உறுப்பினர்களில் 51 சதவீதத்தினருக்கு ரூ.5 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. 31 சதவீதத்தினர் ரூ.5 கோடிக்கும் குறைவாக சொத்து இருப்பதாக கணக்கு கொடுத்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக கோடீஸ்வர உறுப்பினர்களை கொண்ட சட்டசபை என்ற பெருமை குஜராத்துக்கு கிடைத்துள்ளது. மக்களவையில் 58 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாகவும், மாநிலங்களவையில் 65 சதவீதம் பேர் கோடீஸ்வரர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு கோடீஸ்வரர்களாக உள்ளவர்கள் ஏழை விவசாயி மற்றும்,தொழிலாளர்களின் கஷ்டங்களை எவ்வாறு அறிவர்.இதனால் தான் விவசாயி தற்கொலை செய்துகொள்கின்றான்.தொழிலாளர் நலச்சட்டம் எந்த அரசினாலும்  பேணப்படுவதில்லை.சில நாடுகளில் உள்ள கட்டாய ராணுவப்பயிற்சியை போல் இந்தியாவில் அரசியல்வாதிகளை கட்டாயமாக 5ஆண்டுகள் விவசாயப்பணியும் 5ஆண்டுகள் தொழிற்சாலைகளில் அடிப்படை தொழிலாளியாக  பணியாற்றினால் தான் அரசியலில் ஈடுபடமுடியும் என சட்டம் இயற்றவேண்டும்.அதே போல் தந்தை அரசியல் இருந்து ஆட்சிப்பணி செய்தவர் எனில் கண்டிப்பாக மகன் அரசியலில் ஈடுபடத்தடைவிதிக்கவேண்டும்.நீங்களும்
உழைப்பாளி எனில் சிறந்த தகவல்களை மேலும் வழங்கவும்.

Wednesday 23 January 2013

ஆண் விபச்சாரர்கள்

ஆண் விபச்சாரர்கள்

 

கிராமங்களில் சிரிக்கச்சிரிக்க பேசியே ஆட்களை மயக்கக்கூடிய ஆண்களை இவன் ஆண்விபச்சாரியப்பா எனக்கூறுவர்.மேலும் இன்று ஒருகட்சி நாளை ஒருகட்சியென அரசியலில் இருந்து கொண்டு மேடைக்கு தகுந்தபடி பேசுபவர்களை பேச்சு விபச்சாரன் எனக்கூறுவர்.உண்மையில் தற்போது சில ஆண்கள் செல்வ சீமாட்டிகளுக்கு பாதுகாவலர்களாகவும் ஒரு சிலமணிநேர நண்பர்களாகவும் அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய ஆண்விபச்சாரர்களாகவும் இருந்து வருகின்றனர்.இணைய தளங்களில் அந்தரங்க தேவைகளுக்கு ஆண் நண்பர்கள் தேவையா? என கோரிக்கைவைப்பவர்களும் ஆண் விபச்சாரிகளே. சீனாவில் இதையே தொழிலாளாக அதாவது விபச்சாரவிடுதி நடத்துவது போல் ஒரு மையம் நடத்தி கல்லா கட்டுகின்றனர். அக்கதையை கீழே காண்போம்.

பெண்களின் துணைக்கு, ஆண் நண்பர்களை வாடகைக்கு அனுப்பி வருகிறது, சீனாவிலுள்ள பிரபல விற்பனை நிலையம். ஒரு மணி நேரத்திற்கு, கட்டணமாக, 500 டொலர் வசூலிக்கப்படுகிறது.சீனாவில், ஜெட் வேக வளர்ச்சி இருந்தாலும், மக்கள் தொகை அதிகரித்தாலும், எப்படியெல்லாம் வியாபாரம் செய்யலாம் என்பதையும், யோசித்து, நடைமுறைப்படுத்தி வெற்றியும் பெற்று விடுகின்றனர்.

தற்போது, பெண்களுக்கு துணையாகச் சென்று வர, ஆண் நண்பர்களை வாடகைக்கு அனுப்பி, ஒரு தனியார் நிறுவனம் மும்முரமாக, கல்லா கட்டி வருகிறது.இந்நாட்டில், 18 கோடி பெண்கள் தனியே வசித்து வருவதாக, பத்திரிகை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தனியே வசிப்பவர்களில், வேலைக்குச் செல்லும் பெண்கள், விடுமுறை நாட்களில், வெளியிடங்களுக்கு துணை இல்லாமல் செல்ல தயங்கி வருகின்றனர்.

தற்காலிகத் துணைக்கு அவர்கள் ஆண்களை நம்பவும் தயக்கம் காட்டுகின்றனர்.இவ்வாறு தயக்கம் காட்டும் பெண்களை பயன்படுத்தினால் என்ன என்று, சீனாவின் பிரபல ஆன்-லைன் விற்பனை நிலையமான, “தோபோ டாட்.காம்என்ற நிறுவனம், யோசிக்கத் துவங்கியதன் விளைவு தான், ஆண் நண்பர்களை வாடகைக்கு விடும் திட்டம்.

இந்த திட்டத்தின்படி, தனியே வசிக்கும் பெண், வெளியிடங்களுக்கு குறிப்பாக, வெளியூரில் வசிக்கும் பெற்றோர், உறவினர், தோழிகளை சந்திக்கச் செல்வது, கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றிற்குச் செல்ல, ஆண் நண்பர்களை இந்த நிறுவனம் அனுப்பி உதவும்.இதற்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக, 500 டொலர் கட்டணமாக வசூலிக்கப்படும்.

துணைக்கு வரும் ஆண் நண்பருக்கு, தங்கும் வசதி, உணவு, உடை போன்றவற்றை, பெண் வாடிக்கையாளர் வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் இதுவரை, 260 சேவைகள் வழங்கப்பட்டு உள்ளன.இந்த நடைமுறையால், சீன கலாசாரம் பாதிக்கப்படும் என, ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.

 

Sunday 13 January 2013

இளமைப் பொங்கல்.



                                                                                                                

இளமைப் பொங்கல்.

பொங்கல் இப்பண்டிகை தமிழர்கள் தங்களது உழவின் பலனையும் ஆண்டின் பிறப்பினையும் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்ததன் நினைவாக இன்று எஞ்சியுள்ளது.ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்கள் தலைவர்களின்
பிறந்தநாளையோ அல்லது வரலாற்றில் நடைபெற்ற சம்பவங்களை நினைவுகூறுவதர்க்கு பண்டிகைகளை கொண்டாடி வருகையில் தமிழ்சமுதாயம் மட்டுமே தங்களது உழைப்பினால் உண்டான உழவின் பலனை கொண்டாடுவதால் உண்மையான மகிழ்ச்சி பொங்கள் பண்டிகையில் பெற்றுவந்தனர்.தமிழ் சமூகத்தில் சாதி மதங்கள் கடந்து அனைவரும் கொண்டாடும் பண்டிகை பொங்கல்.கிராம பி ண்ணணி கொண்டு விவசாயத்தினை தொழிலாக கொண்ட இஸ்லாமியர்கள் "தை பாத்திஹா" என்ற பெயரில் இன்றும் இஸ்லாமிய மதகுருமார்களை கொண்டு பொங்கல் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் களுக்கு முந்தின தினம் போகிப் பண்டிகை இதில் பழையன கழிதலும் புதியவைகளை ஏற்பதற்குமான  நிகழ்வாகும்.இந்த முறை போகியில் நமது பழைய மூடப்பழக்கவழக்கங்களை விட்டொழித்து புதியமனிதர்களாக உருவெடுக்க முடிவெடுப்போம்.குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் எரித்து சுற்றுபுறம் மாசுபடுத்தாமல் நம்மிடமுள்ள கெட்டபழக்கங்களை எரித்துஒழிப்போம்.இந்நாளில் நம்மிடம் தேவையின்றி இருக்கும் பொருட்களை ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து உதவுவோம்.பண்டிகைக்கு முந்தைய தினம்  வீட்டினை சுத்தம் செய்யவேண்டும் என்று உலகிற்கு  அறிவித்த தமிழ்சமுதாயத்தை சுற்றுப்புறத்தினை மாசுபடுத்தாதீர் என மற்றவர் கூற அனுமதியோம்.தமிழ்சமுதாயம் உழவினை தனது முக்கிய தொழிலாக கொண்டதால் இயற்கையின் ஆர்வலர்களாக இருந்துவந்துள்ளனர்

உலகின் முதல் இயற்கையான சூரியனை வணங்கும் தினமாக பொங்களை அமைத்துள்ளனர்.அதன் பொருட்டு காலை இனிப்பு பொங்களை தங்களது       வீட்டிற்கு வெளியே சமைத்தனர்.தங்களது  வீட்டில் சமைக்கும் வரை அது தங்களுக்கு மட்டுமாக இருந்தாலும் வெளியே சமைத்து மற்றவர்களுக்கும் விருத்தளித்து தானத்தில் சிறந்த சமுதாயமென நிருபித்து வந்தனர்.இந்த பொங்களிடும் பொழுது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருங்கே அமைந்து பெண்களுக்கு உதவியாக ஒற்றுமைபொங்கல் படைத்தனர்.பொங்கல் மறுநாள் தங்களது உழவிற்கு உதவும் கால்நடைகளுக்கு சிறப்பு செய்யும் விதமாக மாட்டுபொங்கல் கொண்டாடிவந்தனர்.தங்களது வளர்ப்பு பிராணிகளை சிறப்பித்த முதல் சமுதாயம்  தமிழ்சமுதாயமாக இருந்தது.இன்று தங்களின் குடும்பத்தினரையும் வாரிசுகளையும் சரியான முறையில் வளர்க்க முடியாத சமுதாயமாகி வருகின்றது.இந்நாளில் மற்றும் ஒருசிறப்பாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப் பட்டு வருகின்றது.உலகில் மனிதன் தோற்றுவித்ததில் எது சிறந்தது என வினா எழுப்பினால் பலர் விவசாயம் எனவும் மற்றும் சிலர் தீ கண்டுபிடிப்பு எனவும்,இரும்பு,பாசன முறை என பல்வேறு விசயங்களை கூறினாலும் நல்லோராக நாம் வாழ உணர்த்தும் பெரியோர்களின் சொற்களே என்று நான்கூறுவேன்.அந்தவகையில் உலகமக்கள் தங்களது வாழ்வில் உயர கடைபிடிக்க வேண்டிய முறைகளை கொண்ட திருக்குறளை படைத்த திருவள்ளுவரை போற்றக்கூடிய நாளை இளைஞர்கள்  கவியரங்கங்கள் திருக்குறள் விளக்ககூட்டங்கள் நடத்தி ஒழுக்கமான வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும்.தமிழர்கள் தங்களது வீரத்தினை நிலைநாட்டும் வகையில் வீரவிளையாட்டாக மஞ்சுவிரட்டு,சடுகுடு ,மாட்டுவண்டி போட்டி
போன்ற விளையாட்டுகளை இந்நாளில் விளையாடி வந்தனர். இந்த வீரவிளையாட்டினை கால்நடைகளை துன்புறுத்தாது நடைபெற வழிவகுக்கவேண்டும்.அடுத்தநாள் உழவர்தினமாக கொண்டாட படுகின்றது.இந்த விடுமுறை நாட்களில் புதிய திரைப்படங்கள் திரைக்கு வருவதை ஆவலாக பார்த்து மகிழநினைக்கும் இளைஞர் சமுதாயம் அதை தவிர்த்து கிராமங்களுக்கு பயணித்து உழவர்களை சந்தித்து உழவிற்கு மரியாதை செய்திடவேண்டும்

 பண்டைய பொங்கலில் போகியில் துவங்கி உழவிற்கு நன்றி செலுத்தி முடியும் பொங்கலில் இளைஞர்களின் பங்கே அதிகம். இன்னறய இளைஞர்கள் திரைபட நடிகர்களின் ரசிகராகவோ,மத சாதி புரோகிதர்களின் பிடியில் மத சாதியவாதியாகவோ அல்லது,அரசியல்வாதிகளிடமோ தங்களது இளமையினை தொழைத்து விடுவதோடு புதிதாக இளமையின் தன்மையான வீரம்,வீவேகம்,செயலாற்றும் திறனை டாஸ்மாக்கில்   மூழ்கடித்து வருகின்றன.விவேகானந்தரின் பொன்மொழிகளில் முக்கியமானது என்னிடம் நூறு இளைஞர்களை கொடுங்கள் நான் இந்தியாவினையே மாற்றிகாட்டுகிறேன். ஆம் உலகத்தினை உன்னதமாக்கும் சக்தி நம் தமிழ்இளைஞர்கள் கையில் தான் உள்ளது.தமிழகத்தில் இயற்கை வளங்களை காப்பது,அரசியலில் ரெளடிகளை வெளியேற்ற செய்யவேண்டியது , மற்ற அனைத்து பண்டிகையையும் விட தமிழர்களின் ஆதி பண்டிகையான பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்கசெய்ய அரசை தூண்டுதல்,  பக்கத்து நாட்டில் நமது சொந்தங்கள் அநாதைகளாக இருந்து வருபவர்களை சுதந்திரகாற்றை சுவாசிக்க செய்யும் மிகச்சீரிய பணிகள் இன்றைய இளைஞர்கள் கைவசம் உள்ளது.பொங்கலை  மீண்டும் உயிரோட்டமாக உருவாக்கும் பொறுப்பு இன்றைய இளைஞர்களிடமே உள்ளது என்பதனை உணர இக்கட்டுரை ஒரு சிறு பொறியாகும் என எண்ணி படைக்கிறேன் என் எழுத்து பொங்கலை.

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை..