Saturday 15 December 2012

இறப்புக்கால உதவித் தொகை


இறப்புக்கால உதவித் தொகை

தொழிலாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு இறப்புக்கால உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்குவதற்கான தீர்மானம் தொழிலாளர் நல வாரியக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் நலத் துறை அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் நல வாரியத்தின் 74-வது கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை உயர்த்தியும், தொழிலாளர்கள் பணிக்காலத்தில் இறந்து விட்டால் அவர்களின் குடும்பத்துக்கு இறப்புக் கால உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இணக்க பேச்சுவார்த்தைக்காக சென்னைக்கு வரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறைந்த வாடகையில் தங்குவதற்காக ஜீவா இல்லம் கட்டப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அந்த இல்லத்தை முன்னதாக அமைச்சர் செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தொழிலாளர் நலத் துறையில் பணிபுரிந்து இறந்த 9 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன உத்தரவுகளையும் அவர் வழங்கினார்.

 நன்றி.தினமணி

Wednesday 12 December 2012

சிறார் அடிமைத் தொழிலாளி


சிறார் அடிமைத் தொழிலாளி

 

நன்றி பிபிசி

 

இளமையில் தொழில் -- ஐ.நா மன்றம் கவலை


உலகெங்கும் 20 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்று சிறார் தொழில் செய்வது குறித்த புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

இவர்களில் சுமார் ஒன்றரை கோடி சிறார்கள் எந்த ஒரு பள்ளிக் கல்வியும் கிடைக்கப் பெறாமலே இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது.

இதுபோல சிறார்கள் வேலை வாங்கப்படுவது குறைந்து வரும் விகிதம் மிகவும் மந்தமாகவே இருப்பதாகவும், உலக அளவில் கல்வியை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை இது குலைப்பதாகவும், கல்விக்கான ஐ.நா மன்ற சிறப்புத் தூதர் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன்) அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறுகிறது.

ஆப்ரிக்காவில் வேலையில் ஈடுபட நேரிடும் சிறார்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு வாக்கில் மேலும் 1.6 கோடியாக அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது.

 

 

இந்தியா உள்ளிட்ட வறிய நாடுகளில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

உலகில் தற்போது 2 கோடியே 70 லட்சம் பேர் அடிமைத் தொழிலாளிகளாய் இருப்பதாக ஃப்ரீ த ஸ்லேவ்ஸ் அடிமை விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கும், கர்ரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக ஏற்றுமதியானவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித சரித்திரத்தில் எந்த ஒரு நேரத்திலும் இருந்த அடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கையைவிட தற்போதைய உலகில் கூடுதலான அடிமைத் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சித் தகவலாக வந்துள்ளது.

மிக வேகமான ஜனத்தொகை அதிகரிப்பு, ஏழ்மை, அரசாங்க ஊழல் போன்றவை காரணமாக பல நாடுகளில் அடிமைத் தொழிலாளிகள் இன்றளவும் இருந்துவரவே செய்கிறார்கள் ஃப்ரீ த ஸ்லேவ்ஸின் ஆராய்ச்சியாளர் கெவின் பேல்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க அடிமைகள்

முந்தைய நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர்.

16ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆப்பிரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1 கோடியே 25 லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது

ஆகவே தற்போதைய அடிமைகள் எண்ணிக்கை இதனை விட இரு மடங்குக்கும் அதிகம் என்று தெரியவருகிறது.

அடிமைகள் என்பதெல்லாம் பழங்கதை என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பல வடிவங்களிலும் அடிமைத் தொழில் இன்றளவும் எல்லா கண்டங்களிலும் நீடிக்கவே செய்கிறது.

 

நவீன காலத்து அடிமைகள்

பாலியல் தொழிலுக்காகவும் உடல் உழைப்புக்காகவும் சுரண்டப்படுபவர்கள், வாங்கிய கடனை திரும்பச் செலுத்தவில்லை என்பதற்காக கொத்தடிமைகளாக வேலைபார்க்க நேர்ந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களை அடிமைகள் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியும்.

"அடிமை என்றவுடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருவது வட இந்தியாவில் கல்லுடைக்கும் மக்களைத்தான்", என்று கூறுகிறார் அடிமைத் தொழிலாளிகள் பற்றி புலனாய்வு செய்து தகவல் வெளியிட்டுவரும் பத்திரிகையாளர் பென் ஸ்கின்னர்.

"தான் வாங்கிய ஒரு சிறு கடன் தொகையை திரும்பக் கொடுக்க வழியில்லாமல் தான் காலாகாலமாக கொத்தடிமையாக வேலைபார்ப்பதாக இந்த தொழிலாளிகள் கூறுகின்றனர்", என ஸ்கின்னர் தெரிவித்தார்.

வேலையை விட்டு ஓடினால், குவாரியின் ஒப்பந்தக்காரரால் கற்பனைக்கெட்டாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்று அத்தொழிலாளிளிகள் அஞ்சுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய உலகில் ஏழை நாடுகளில்தான் அடிமைத் தொழிலாளிகள் பெரு எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.

ஆனால் வளர்ந்த நாடுகளிலும்கூட அடிமைத் தொழிலை ஒழிப்பதில் சட்டங்கள் போதிய வலிமை உடையதாக இல்லை என்று கெவின் பேல்ஸ் நொந்துகொண்டார்.

"வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சொத்துபத்துக்களையும் அடமானம் வைத்து விட்டு கள்ளத்தோனி ஏறி வெளிநாட்டுக்கு வந்த பின்னர், பயண ஆவணங்களையும் பறிகொடுத்த நிலையில், வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு அடுப்படியில் ஓய்வு உறக்கம் இன்றி வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளியும்கூட இந்தக் காலத்து அடிமைகள்தான்." என அமெரிக்க அதிபர் ஒபாமா அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

நமது உரை

 

உலகம் முழுமையிலும் தற்பொழுது அடிமைத்தொழிலாளர்கள் அதிகரிப்பைப் பார்க்கும் பொழுது கூடிய விரைவில் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த புரட்சி ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது தெரிய வருகின்றது.தொழிலளர்கள் நசுக்கப்பட்ட காலங்களில் எல்லாம் எழுச்சியும் கண்டது தான் வரலாறு. தொழிலாளர்கள் அமைதியாக இருப்பதாக நினைக்கும் இவர்களுக்கு தொழிலாளர்கள் அமைதியாக இருக்கும் எரிமலைக்கும் அணுவை போன்று எங்களை சிறியவர்களாக நினைப்பவர்களுக்கு அணுவெடிப்பினை போன்றவர்கள் என கூடிய விரைவில் நிரூபிப்பார்கள்.

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை.

 

 

Monday 10 September 2012

வண்ண வண்ண பட்டாசு



வண்ண வண்ண பட்டாசு

தீபஒளியில் திகட்டா இன்ப பட்டாசு.
மக்களுக்கு மகிழ்வு கொடுத்த பட்டாசு.
பிஞ்சு தொழிலாளி கைவண்ண பட்டாசு.
கருமருந்து கலவையாலான பட்டாசு.
உயிர்கொடுத்து உருவாக்கும் பட்டாசு.
பத்த வைத்தால் வெடிச்சு குப்பையாச்சு.
சுத்தி வைத்ததால் குடோனே வெடியாச்சு.

வழமை போலவே எல்லாம் நடந்தாச்சு.
உரிமம் இல்லைஎன ஊர்ஜீதமாயாச்சு.
அரசாங்கம் தான் கமிசன் அமைச்சாச்சு.
அரசியல்வாதி அனுதாபம் சொல்லியாச்சு.
முதலாளியோ தலைமறைவாயாச்சு.
உழைப்பாளிகளோ உடமை இழத்தாச்சு.
ஊனமாயாச்சு உயிரும் இழத்தாச்சு.
வீட்டிற்கு ஒருவர்தான் இழந்துதவிச்சாச்சு.
இபிஎப் இஎஸ்ஐ இன்சுரன்ஸ் இனியாச்சு
பிடிச்சுசுடுங்கணு சொல்லி தவிச்சாச்சு.
நல்லோர்மனங்கள் வெந்துபுண்ணாச்சு.
இதற்கெல்லாம் முடிவு தேடி களைப்பாச்சு.

.ஷாஜஹான்,99425 22470.
திருமங்கலம்.மதுரை.

Wednesday 6 June 2012

விடுமுறை


விடுமுறை தான்விட்டாச்சு வீதியெல்லாம் கொண்டாட்டமாச்சு.

விசயம் பல புதுசா வித்தாகிட விடுமுறை தான் விட்டாச்சு


விவசாயி தாத்தா காண கிராமம் தான் கிளம்பியாச்சு.


விடியற்காலை பொழுதே சின்னசிட்டுகள் விழிச்சாச்சு.


வில்லங்க சம்மர் கேம்ப் சங்கடத்தில் தப்பிச்சாச்சு.


விவசாய கிணறுகளும் மரங்களும் புதுசா பார்த்தாச்சு.


விளையாட்டே தான் இனி முழுபொழுதும் என்றுஆகியாச்சு.


விருந்தினரின் வருகையும்தான் கிராமமே விசேஷமாச்சு.

விண்ணவனும் கோடை மழையை வந்து கொட்டியாச்சு.


விடலை பசங்களின் கில்லிதாண்டிஆட்டமும் அபாரமாச்சு.


விரைவாய் தான் விடுமுறையும் இந்த ஆண்டு முடிச்சாச்சு .


விடை கொடுக்கின்றோம் விடுமுறையே மகிழ்ந்தாச்சு.


விருப்பம்போல அடுத்தஆண்டு வருவாய் விரைஞ்சு.



விடுமுறை

பள்ளி படிக்கும் தம்பிதங்கைக்கும் விடுமுறை.

அரசு பணி அப்பா,அண்ணணுக்கும் விடுமுறை.


டாஸ்மாக்கும் வருசத்தில் ஐந்துநாட்கள் விடுமுறை.


இராணுவத்தினருக்கும்மருத்துவருக்கும் விடுமுறை.


சமையலாளாய் சலவையாளாய் ஒய்வின்றி 


பணியாற்றும் எனதுஅன்னைக்கு என்று விடுமுறை.

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை.

Monday 30 April 2012

மே தினம்


மே தினம் 8மணி நேர வேலையை உறுதிசெய்ய உலகமெங்கும் ஏற்பட்டதொழிலாளர்களின் உன்னத புரட்சியின் பலனால் ஏற்பட்டது என்பதனை நாம் அறிவோம்.ஆனால் அது நமது இந்தியாவில் ஏட்டளவில் தான் உள்ளது என்பதும் நாம் அறிவோம் .ஆனால் தற்பொழுது தொழிலாளர் நலச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என பிரதமர் வெளிநாட்டு கார்பரேட் நிறுவனங்களை மனதில் வைத்துக்கொண்டு கூறிவருவது அந்த ஏட்டளவு சட்டங்களுக்கும் தொழிலாளர்கள் விழிப்புணர்வு இல்லையெனில் பங்கம் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

இந்த எட்டு மணி நேர உழைப்பு நிர்ணயம் என்பது பெரும்பாலும் படித்தவர்களுக்குத்தான் உதவுகிறது. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எனப்படும் கல்லுடைக்கும் கொத்தடிமைகள், டாஸ்மாக் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், ஆலை ஊழியர்கள், நெசவுத் தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தினக் கூலிகள் என கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் ஒரு வேளை உணவுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்தியாவில் பெரும்பான்மை தொழிலாளர்களின் எட்டாகனியாக எட்டுமணிநேர வேலை அமைந்துள்ளது.

மேதின வரலாறு

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

இந்தியாவில் மே தினம்

இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் .சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

தொழிலாளர் விழிப்புணர்வே மேதினசெய்தி

நம் தொழிலாளர்கள் அரசு மற்றும் நிர்வாகத்தின் நெருக்கடிக்கு பயந்து வாழக்கூடிய சூழ்நிலையிலிருந்து மீட்டு தனது பலத்தினை அறிவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தொழிலாளர் சங்க தலைவர்கள் முன்வரவேண்டும். “நாம் எம் எதிரிகளால் தூக்கில் இடப்படுகின்றோம். மரணத்தின் பின்னான எம் கல்லறைகளின் மௌனம் பல கதைகள் சொல்லும்இது மேதினத் தியாகிகளின் இறுதி வார்த்தைகள்.ஆம் உங்களின் கல்லறைகளின் மௌனம் கடந்த 125-வருடங்களாக, அனைத்துலகப் பாட்டாளி வார்க்கத்திற்கும், விடுதலைக்காகவும், இழந்த உரிமைகளுக்காகவும் போராடும் மக்களுக்கும் பல கதைகளைச் சொல்லியுள்ளன. தொழிலாளர்கள் தங்களின் பலத்தை அறியாமல் இருப்பது தொழிற்சங்களின் செயல்பாட்டின்மையையே காட்டுகின்றது.பல
ஊடகங்களும் மறைமுகமாக தொழிலாளர்களுக்கு எதிராக எழுதிவருகின்றன.தொழிலாளர்களை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் மறைமுக கூட்டணி அமைத்துகொண்டு தங்கள்நிர்வாகிகளைமட்டும் காப்பதற்கான அமைப்புகளாக மாறி வருவதால் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் தோல்வியை சந்தித்துவருகின்றன.தமிழகத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வரும் இரு திராவிட கட்சிகளும் ஆட்சியில் இல்லாத பொழுது தொழிலாளர்கள் ஆதரவு நிலையையும் ஆட்சியில் அமர்த்திவிட்டால் கட்சி சார்பற்ற தொழிலாளர்களை கட்சி தொடர்பினை ஏற்படுத்தி அவர்கள் நலனினை புறக்கணித்து வருகின்றன. எனவே இக் கட்சிகளை என்றும் எதிர்கட்சியாகவே அமர்த்த தொழிலாளர் விழிப்புணர்வினை தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தவேண்டும்.மக்கள்நலப்பணியாளர்கள்,சத்துணவு பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்கள்,நகராட்சி,மாநகராட்சி பணியாளர்கள் அனைத்து அரசுசார்புடைய தொழிலாளர்கள் ஒருங்கினணந்து அரசிற்கு ஏதிராக போராடி தொழிலாளர் நலச்சட்டங்களை நிறைவேற்ற பாடுபடவேண்டும்.

மே தின உழைப்பாளர்களின் போராட்டம் இன்றும் நம்மை போராட்டத்தின் பலனை நமக்கு உணர்த்துவதுடன் தொழிலாளர்கள் விழிப்புணர்வே தொழிலாளர் நலன் சார்ந்த விசயத்தில் நன்மையை ஏற்படுத்தும் என்று இந்நாளில் நாம் தொழிலாளர்களுக்கு உண்ர்த்துவோம்என்று உறுதிஏற்போம்.



.ஷாஜஹான்.திருமங்கலம்.9942522470.