Wednesday, 8 October 2014

பாறைத் திருவிழா

பாறைத் திருவிழா



மழையோடு மகிழ்வாக
பந்த் தனை பந்தாடி
நிகழ்ச்சி நிகழாதென
குறுஞ்செய்தியில் குழப்பினாலும்
பசுமைநடையினர் பாங்கோடு
குவிந்தனரே குயில்குடியில்
பார்வையாளர்கள் பாராட்ட

தெப்பத்து தாமரை அழகினை ரசிப்பதா?
மலைகோவில் சிலைகளை ரசிப்பதா?
ஆலமரத்து அழகினை ரசிப்பதா?
குயில்குடி குருவிகளை ரசிப்பதா?
குழந்தைகளின் குதுகுலங்களை ரசிப்பதா?
அமுதமென அன்னமிட்டதனை ரசிப்பதா?
பேரமுத பேச்சினை ரசிப்பதா?

இடர்பாடுகளை இன்முகத்துடனும்
அவசர சிகிச்சையில் அப்பாவினையும்
கவலைகளை களைகளாய் கலைந்த
முத்துவின் தலைமையினை ரசிப்பதா?
முத்துவுடனே முத்துகுளித்த
முத்தான பசுமைநடையாளர்களை ரசிப்பதா?

ரசிப்பதில் ரசாபாசத்தினை உருவாக்கிட்ட
பசுமைநடையின் பாறைத் திருவிழா
அடுத்த விழாவிற்கு அச்சாரம் போட்டாலும்
விடாது விரட்டும் இனிய நிகழ்வாய்
பாறைத் திருவிழா!.

                உங்கள் வஹாப் ஷாஜஹான்,
                      திருமங்கலம்.





7 comments:

  1. ஒளிப்படக்கவிஞரே!

    அற்புதம். மழையில் மலையும், பாய்ந்து வரும் புரவியில் கருப்பும், பாறைத்திருவிழா பதாகை படங்கள் அட்டகாசம்.

    ஒவ்வொரு வரிகளும் தங்களின் ரசனையை உலகிற்கு பறைசாற்றுகின்றன.

    வாழ்த்துகள்.

    அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி சித்திரவீதிக்காரன்

      Delete
  2. அற்புதமான எளிய பதிவு புைமைைகைபடம் அருைமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேல்முருகன் சார்

      Delete
  3. ஆஹா... எங்கேங்கானும் இருந்தீர் நீர் இவ்வளவு நாளா???

    ReplyDelete
  4. கலக்கலான ஒரு பதிவு.. அருமை அண்ணா :-)

    ReplyDelete