நமது தமிழகத்தில் இலக்கிய மற்றும் அரசியல்
ஆர்வமுடைய பலரையும் நான்மாடக்கூடல் என அழைக்கப்படும் மா
மதுரையானது சென்ற ஞாயிறு (ஆகஸ்டு
25,2013) தன்னகதே திரும்பி பார்க்கச்செய்துள்ளது.இன்றைய பெரும்பாண்மை இளைஞர்
சமுதாயம் தங்களது திரை நட்சத்திரகளின்
படங்கள் வெளிவராததற்கு சாலை மறியலும் மற்றும்
சினமா நடிகர் நடிகைகளை தலைவர்களாகவும்
தங்களது மத சாதி தலைவர்களின்
கண்ணசைவில் பலர் தலைகளை கொய்யக்கூடிய
கூட்டத்தினராகவும்,அரசியல் என்ற பெயரில்
சிலகுடும்பங்கள் முன்னேறவும்,கொள்கைகளை கொள்ளைபுறம் தூக்கிவீசிவிட்டு இருக்கும் அரசியல் கட்சிகளிடம் தலையாட்டி
பொம்மைகளாகவும் இருந்து வரும் நிலையில்
மூதூர் மதுரையில் ஓர் இளைஞரின் முயற்சியில்
மிகப்பெரிய மாற்றத்தினை சந்தித்துள்ளது.