Saturday, 24 May 2014

போரின் மறுபக்கம்

       
   

                     புத்தக விமர்சனம்
புத்தகத்தின் பெயர் : போரின் மறுபக்கம்
வெளியிடு         : காலச்சுவடு பதிப்பகம்
விலை            : ரூபாய் 200
ஆசிரியர்          : தொ. பத்தினாதன்.

அனுபவமிக்கவர்கள் நம்மிடம் “ உலகில் உன்னை விட வறுமையிலும் கஷ்டத்தில் இருப்பவர்களை பார்த்து நீ எந்தளவு சுகபோகியாய் இருக்கின்றாய் என தெரிந்து கொள் ” எனக்கூறுவர். ஆம் இந்த புத்தகத்தினை படித்ததால் சவால் விட்டு கூறுவேன் தமிழகத்தில் உள்ள மக்களில் ஆக கடைசி வறுமையாளர்களை விட இலங்கை தமிழ் அகதிகள் மிகுந்த வறுமையிலும் மனகஷ்டத்திலும் உள்ளார்கள் என்று.
தொ. பத்தினாதன் என்ற அகதியின் சுயசரிதையை படித்தபின்பு வலைதளங்களில் சினிமாவிற்கும்,பாலியல் கவிதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர்களை புளிச்ச ஏப்பகாரர்களாகவே பார்க்கின்றேன். அவர் தன் எழுத்துக்களில் மனநோயாளியாய், பாதிக்கப்பட்டவர்களின் குரலாய், நண்பர்களுக்கு கடமைபட்டவராய், சக அகதிகளின் சூதாட்டகுணங்களையும், க்யூ பிரான்ச் போலிஸிற்கு பயந்த கூட்டமாய், மலம் கழிக்கக்கூட இடமில்லாதவர்களாய் பலவழிகளில் அவர் தம் நடந்துவந்த பாதையில் நம்மையும் புத்தகத்துடனேயே அழைத்து செல்கிறார்.


“ இலங்கையில் ஈழத்தமிழனுக்கு ஆயுள் மிகமிகக் குறைவு.அவன் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பாகவே இறந்து போவான்.ஒன்று குண்டுக்கு இரையாவான். பசி, பட்டினியால் நோய் தாக்கி இறப்பான்.அதில் தப்பினால் மனநோயால் இறந்து போவான். ஈழத்தமிழன் பேசினால் மட்டுமல்ல. ஈழத்தமிழனாகப் பிறந்தாலே ஆயுள் குறைவு தான். “ இவைகளை போன்ற எண்ணிலடங்க கஷ்டங்களை சுயமாக அனுபவித்து இந்த புத்தகத்தினை அச்சு ஏற்றுவதற்காக பட்ட இரணங்களை படிக்கையில் கண்கலங்காதவர்கள் இருக்கமுடியாது.

சமீபத்தில் கொடைக்கானல் சென்ற பொழுதினில் திபெத்திய அகதிகளுக்கு முக்கிய இடங்களில் நமது அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் கடைகளை பார்த்தேன்.திபெத்திய அகதிகளை நல்ல நிலையில் வைத்திருக்க நினைக்கும் இந்தியா அரசு இலங்கை அகதிகளுக்கான நலனில் மட்டும் ஏன் இந்த நிலைதனை எடுக்கின்றது. மாற்றங்களை எதிர்பார்போம். இப்புத்தகம் படித்தவர்கள் இவரின் அடுத்த படைப்பினை எதிர் நோக்குவர் அந்த வரிசையில் நானும் உங்களுடன்.

1 comment:

  1. புளிச்ச ஏப்பகாரர்களாகவே பார்க்கின்றேன். அருமையான வரிகள்...

    திபெத்திய அகதிகளை நல்ல நிலையில் வைத்திருக்க நினைக்கும் இந்தியா அரசு இலங்கை அகதிகளுக்கான நலனில் மட்டும் ஏன் இந்த நிலைதனை எடுக்கின்றது.

    மேலே கூறீய வரிகளில் இந்திய அரசு, இலங்கை அகதிகளுக்கான நலனில் மட்டும் ஏன் கண்டுகொள்வதில்லை என்று கூறீயுள்ளீர்கள். இங்கு வாழும் தமிழர்களே அவர்களை தங்களது உறவுகளாக பொருட்படுத்துவதே இல்லை. அதை என்னவென்று கூறுவது.

    இருப்பினும் இந்த நூல் அறிமுகம் மூலமாவது அவர்களின் இன்னல் நிறைந்த வாழ்வை அனைவரும் அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளீர்கள். உங்களுக்கு நமது நன்றிகள்.

    ReplyDelete