தமிழகத்தின் பருவநிலை
மாற்றங்களில் மழை பொய்த்து கோடைகாலம் மட்டுமின்றி காற்றடி காலங்களிலும் வெயிலின் தாக்கம்
அதிகரித்து வெப்ப காற்றினையே அதிகம் நுகரக்கூடியவர்களாக பெரும்பகுதிமக்கள் இருந்துவருகின்றோம்.
மாறிவரும் பருவசூழ்நிலைகளுக்கு ஒப்ப காற்றடிகாலங்களில் பொதுமக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்
அனைவரும் அறிந்த விசயங்களாக இருந்தாலும் நினைவூட்டுவது தானே இணையத்தின் கடமை. அந்தவகையில்
காற்றடி காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை கீழ்காணலாம்.
1.
சாலையோரம்
மற்றும் வீடுகளில் உள்ள மரங்களின் ஒருசில கிளைகள்
வறட்சியின் காரணமாக காய்ந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்த தயார் நிலையில் இருந்துவரும்
அம்மரங்களின் காய்ந்த கிளைகளை அகற்றவேண்டும்.