தமிழர்கள் தங்களின் குடும்ப பழம்பெருமைகளையும் பன்னெடும்
மத சாதிய உயர்வுகளையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு தங்கள் பிறந்த இத்தமிழ்மண்ணின்
பெருமைகளையும் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த உழவுசார் வாழ்வினை அறிவது இல்லை. பொங்கல்
பண்டிகையின் மூலம் இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டியது முதலில்
உண்ண உணவு வழங்கி வரும் உழவிற்கு வந்தனை செய்யவேண்டுவதும்
வந்தனை செய்யாவிடினும் நிந்தனை செய்யாமல் இருக்கவேண்டியே இக்கட்டுரை.
சங்கம் அறிவோம்.
தமிழர்கள் தமது பெருமைகளை அறிந்துகொள்வதற்கான சங்க இலக்கிய
நூல்களை தங்களிடமிருந்து வெகுதொலைவிற்கு ஆங்கிலக்கல்வியை முன்னிருத்தி தொலைத்து வருகின்றனர்.சங்க இலக்கியம் கற்ற எந்த மனிதனும்
தனது மண்னை வறண்டு போக செய்யமாட்டான். ஏனெனில் சங்க நூல்கள் அனைத்தும் இயற்கையோடு இணைந்து
தமிழர்கள் வாழ்ந்த பெருமைதனை சொல்லிவருகின்றது.சங்க இலக்கியங்களில் மனிதனின் வாழ்வு,
வீரம், சோகம்,வெற்றி,தோல்வி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் இயற்கை சார்ந்த விவசாய
நடவடிக்கைகளை உவமானங்களாக கொண்டே படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குறுந்தொகை பாடலில்
“சிவப்பு தினணயானது கரும்பினை போன்று வளர்ந்துள்ளது என்பதிலும்,புறநானூறு பாடலில் மரண
செய்தி கேட்ட பெண்கள் மார்பில் அடித்து அழுகின்ற நிகழ்வினை “ஊழின் உருப்ப எருக்கிய
மகிளிர் வாழைப் பூவின் வளை முறி சிதற” என்பதில் அதாவது மார்பில் அடித்து அழும்பொழுது
பெண்களின் உடைந்த வளையல்கள் வாழைப்பூக்கள் போன்று நிலத்தில் சிதறின என உரைப்பதிலிருந்து
அறியலாம்.