இனிப்பு சுவையை
இயற்கையாக கிடைக்கும் தேனை கொண்டு முதன் முதலில் சுவைத்து மகிழ்ந்த தமிழன் . பின்பு
பனையிலிருந்து கிடைத்த (கருப்பட்டி) சூடான இனிப்பு பாகினை உருவாக்கி பொரியுடன் இணைத்து
பொரி உருண்டையும், கடலையுடன் இணைத்து கடலை உருண்டையும், அரிசி மாவு பொருட்களுடன் இணைத்து
அதிரசம் போன்ற இனிப்புகளை தயார் செய்து உண்டுமகிழ்ந்தான். இதையே விற்பனைக்கு கொண்டுவந்த
நாடார் சமுதாயத்தினர் மிட்டாய்கடை என்று பெயரிட்டனர். இன்றும் மதுரையில் மிட்டாய்கார
தெரு என ஒரு தெரு அமைந்துள்ளது. மிட்டாய் என்றவுடன் பலவகைமிட்டாய்கள் நமக்கு நினைவுக்கு
வந்தாலும் சவ்மிட்டாய்சுவையே அலாதியானது. சவ்மிட்டாய் பழங்காலத்தில் கருப்பட்டி சாரினை
கொண்டே தயாரிக்கப்பட்டுவந்தது. தற்பொழுது சர்க்கரை பாகினை கொண்டு தயார் செய்யப்படுகின்றது.