ஊழலின் ஊற்றுக்கண்
இன்றைய உலகநாடுகள் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அறிவித்து செயல்பட்டாலும்,அறிவிக்காமல் ஓர் திட்டத்தை முன்னேற்ற திட்டமாக எண்ணி செயல்படுத்துகின்றன.அது என்னவெனில், தொழிலாளர்களை பணியில் சேர்ப்பது பின்பு சேர்ந்த தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்குவது பின்பு பணி நிரந்தரம் செய்வது போன்ற விசயங்களில் பாரமுகமாக இருந்து நாட்டை முன்னேற்றுவதாக எண்ணி நாட்டில் ஊழலின் ஊற்றுக்கண்களை திறந்துவிடுகின்றன.இதிலும் மேலாக சில இடங்களில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் தொழிலாளர்கள் குறைப்பு செய்து நாட்டை அழிவின் பாதைக்கே அழைத்து செல்கின்றன.தற்பொழுது பல இடங்களில் நிரந்தர பணியாளர்களே எடுப்பதில்லை.பதிலாக ஓப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரிலும்,தினக்கூலி தொழிலாளர்கள் என்ற பெயரிலும் நியமித்து வேலைகளை தொழிலாளர்களிடம் வாங்கியே தொழிலாளர்களின் சலுகைகளை பறித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துவிட்டதாக எண்ணுகின்றனர்.ஆனால் உண்மையில்நாட்டில் நடைபெறும் ஊழல்களுக்கு இதுவே முதல்படியாகும்.இவ் விசயத்தில் தமிழகத்தின் தொழிலாளர்களின் இழிநிலையை இக்கட்டுரையில் காண்போம்.

தனியார்
துறைகளில் தொழிலாளர்கள் அடக்குமுறைகள் அனைவரும் அறிந்ததே என்றாலும் தொழிலாளர்கள் விசயத்தில் எவ்வாறு நடக்கவேண்டும் என்று
முன்மாதிரியாக இருக்கவேண்டிய அரசுசார்ந்த நிறுவனங்களில் தொழிலாளர் நிலையை ஒப்பிடுகையில் தனியார்
தொழிலாளர் நிலை ஓரளவு பரவாயில்லை
என்றே தெரியவருகின்றது.தமிழகத்தை பொருத்தவரையில் எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொழிலாளர்களுக்கு எதிராக சிந்திக்கும் விசயத்தில்
ஒரே மாதிரியாக இருக்கின்றன.
தமிழகம்முழுமையான ரேசன் கடைகளை எடுத்துக்கொண்டால்எக்கடைகளிலும் நிறுவைகளில் சரியான அளவுகளில் பொருள்வழங்குவதுஇல்லை.அது மட்டுமில்லாமல் போலிகார்டுகள்,சரக்கை கடத்துதல், வெளியாட்கள்வேலை பார்ப்பதுபோன்ற தவறுகள் தினசரி நிகழ்வு.இது அனைவருக்கும் தெரிந்தஒன்று.இந் நிகழ்வை தடுக்கஎந்த அரசும் முன்வரவில்லை.ஆட்சிமாறினாலும் ரேசன் கடைகளின் காட்சிமாறாது.ஏன் எனில் ரேசன்கடை ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம்.கடைகளில்குறைந்த வேலையாட்கள்என அரசு பலமுன்னேற்ற நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ள காரணத்தால் இனிவரும் காலங்களிலும் ரேசன் கடைகளில் நாம்நியாயமான வியாபாரத்தை எதிர்பார்க்க முடியாது.அரசு சார்ந்த கடைகளிலேநியாயமான வியாபாரம் இல்லாதபோது தனியார்களிடம் நாம் எதிர்பார்பது எந்தவிதத்தில் நியாயம்.ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு பதம்என்பது போல நமது வியாபாரத்தின்நேர்மையை அரசு என்று சரிசெய்யும்.

அடுத்ததாக மருத்துவ துறையை எடுத்துக்கொண்டால் அரசு தொழிலாளர்கள் குறைப்பு செய்து மனித உயிர்களுடன் விளையாடி வருகின்றது.தமிழக முழுமைக்குமான மருத்துவமனைகளில்1980ல் 2200 ஆய்வுக்கூட நிபுணர்கள்இருந்தனர்.அப்போது 15 மாவட்டங்கள்,8 மருத்துவக்கல்லூரிகள் மட்டும் இருந்தன.தற்பொழுது 32 மாவட்டங்கள், 16 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.ஆனால் இன்று 1550ஆய்வுக்கூட நிபுணர்களே உள்ளனர்.100 பரிசோதனைக்கு ஒரு ஆய்வுக்கூடநிபுணர் என்ற நிலைமாற்றி 400 பரிசோதனைக்கு ஒரு ஆய்வுக்கூடநிபுணர் என்று அரசு முன்னேற்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.அடுத்ததாக மருந்தாளுனர் பதவியும்அப்படித்தான். 100 வெளிநோயாளிக்கு ஒருமருந்தாளுனர் என்ற நிலையை மாற்றி 221வெளிநோயாளிக்கு ஒருமருந்தாளுனர் என்று முன்னேற்ற நடவடிக்கையை எடுத்துள்ளது.இதன் பலனை வெகுவிரைவில் வறியநோயாளிகள் உணர்வர்.தனியார்மருத்துவமனைகளின் கல்லாகள் நிரம்பவழிவகுக்கும்.
அடுத்ததாக ஆசிரியர் பணிநியமணத்திலும் அரசின் சிக்கனநடவடிக்கை அல்ல அல்ல முன்னேற்ற நடவடிக்கையை பார்த்தால் அரசு பள்ளிகளில் இனி ஈக்களுக்கும், எறும்புகளுக்கும் மட்டுமே பாடம் நடத்துவர் என்றே தெரியவருகின்றது.தற்பொழுது முழுநேர ஆசிரியர் பணி நியமிக்காமல் பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய்5000 ம் ஊதியமாக நியமிக்க உள்ளதாக கூறி அதற்கான வேலைகள் நடந்துவருகின்றது.இவர்களுக்கு எப்பொழுது பணிநிரந்தரம் அந்த கேள்விக்கே இடமில்லை. நல்ல அடிமை சிக்கிஉள்ளனர் என்றும் நமக்கு கிடைத்த அடிமைகள் நல்ல திறமைசாலிகள் என அரசு முழங்குகின்றது. இதன் பலனை வறியவர்களின் வருங்கால சந்ததியினரே அனுபவிப்பர்.நாளைய இளைஞர்களை அறிவிலிகளாக்குவதில் அரசுக்கு என்னே சந்தோசம்.
அடுத்தாக போக்குவரத்துத்துறையை எடுத்துக்கொண்டால் சென்ற ஆட்சியில் கட்சிக்காரர்களுக்கு பல லட்சங்களை கொடுத்து டிரைவர்,கண்டக்டர் பணிநியமனம் மட்டுமேநடைபெற்றது. பணிமனைகளில் கடந்த 10ஆண்டுகளாக பணிநியமனமே இல்லை. பணிப்பழகுனர்களை கொண்டே பணிகள் நடைபெறுகின்றன. கடந்த பல ஆண்டுகளாய் பணிபழகுநர் பணிபார்த்தது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தவர்களுக்கு எந்த ஆண்டு பணி வழங்கும் இந்த போக்குவரத்து நிறுவனம்.அவர்களின் ஓய்வு பெறும் வயதுக்குள் எடுக்கவாய்ப்பே இல்லை.அலுவலகத்திற்கும் ஆட்கள் எடுப்பதுஇல்லை.இதனால் தான் இன்சூரன்ஸ்,இபிஎப் போன்றவைகள் சரிவரகட்டுவதில்லை. விபத்து வழக்குகளிலும் சரிவர ஆஜர் ஆகுவதில்லை.பணி பழகுநர்களை கொண்டு பணி நடைபெறுவதால் ஏற்படும் விபத்துகளுக்கு யார் பொறுப்பேற்பது. பின் எப்படி லாபத்தில் செயல்படும் போக்குவரத்துத்துறை.
.
அடுத்தாக லாபத்தில் செயல்படும் டாஸ்மாக்கை எடுத்துக்கொண்டால் கடந்த அம்மாஆட்சியில் துவங்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாய் பணியாற்றும் பணியாளர்கள் இன்றும் தினக்கூலி தொழிலாளர்களாகவே செயல்படுகின்றார்கள். பெருபான்மையினராக பட்டதாரிகளை கொண்ட டாஸ்மாக்கில் ஊழியர்களின் சம்பளம் மிக குறைவுஊழலில் ரேசன் கடைகளுக்கு சவால்விட்டுவருகின்றது. குறைந்த ஊதியமே ஊழியர்களை தவறுகளை நோக்கி இழுத்து செல்கின்றது. தற்பொழுது கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டடாஸ்மாக் மாவட்டமேலாளர்கள் மீண்டும் நியமனம் என செய்திபார்த்திருப்பீர்கள்.உடன் சந்தோசம் அடைந்து விடாதீர்கள்.உண்மையில் அவர்கள் நியமனமேபணிபழகுநர் மேலாளர்கள் ஆவர்.வருடவருடம் அவர்கள் தங்களது பணியை புதுப்பிக்க வேண்டும்.இப்படி நியமிக்கப்பட்டதால் தான் ஆட்சி மாறியதும் ஒரே ஆனையில்வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.கடந்த ஆட்சியில் துணை மேலாளர்கள் இதே போன்றே நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் பயிற்சிக்காலம் ஏப்ரல்வுடன்
முடிவடைகின்றது.ஒரு மாவட்டத்தின் அதிகாரியே பணிபழகுநர் எனில் அந்த நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பிற்காக அரசு எடுக்கும் முயற்சி தெள்ள தெளிவாகிறது.ஊழியர்களை வறுமையில் வாடவிட்டு அரசு பலகோடி லாபம் பெறுகின்றது.
இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொல்பிறக்கும் சோர்வு தரும்.
விளக்கம்:வறுமையானது நல்லோர்களையும் இழிவான சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கிவிடும்.
தமிழக அரசுசார்ந்த நிறுவனங்களில் சோர்வின் நிலை ஏனென்று அன்றே திருவள்ளுவர் கூறிவிட்டார்..
தமிழக அரசுத் துறைகள் அனைத்திலும்
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பணியாளர்களுக்கான
அடிப்படை உரிமைகள் அனைத்தையும் வழங்க மறுத்து வருகின்ற
காரணத்தால் இவ்வரசு ஊழலுக்கான துவக்கத்தினை
இனிதே துவங்கி நடத்திவருகின்றது.இந்த
அரசுகள் தாங்கள் அமெரிக்காவாகவும்,ஜப்பானாகவும்,
சீனாவாகவும் மாற கனவு மட்டும் கண்டால் போதாது.கொஞ்சமாவது தொழிலாளர்கள் நிலைமையை மாற்றி உழைப்பாளர்கள் உயர்ந்தால் மட்டுமே உலகம் உயரும்என்ற நினைப்போடு செயல்பட துவங்கினால் ஊழலை ஒழிக்கலாம் உலகமுழுமையும் ஊழலுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்து வருகின்ற இத்தருணத்தில் உழைப்பாளர்கள் ஒருங்கிணைந்து அரசின் இந்நிலைக்கு எதிராக போராடவேண்டிய தருணம் என்று உணர்ந்து தங்களால் முயன்ற வழிகளில் போராட்டத்தை தொடர்ந்தால் நல்லோர்களின் போராட்டம் என்றும் தோற்பதில்லை.