Tuesday 30 April 2013

உழைப்பாளி உதிரம் குடிப்பவர்கள்


மத்திய அரசில்
இருபது ஆண்டுகள் கடந்தாலும்
என்.எல்.சி தொழிலாளி
ஒப்பந்த கூலியே.

மாநில அரசில்
பத்து ஆண்டுகள் கடந்தாலும்
டாஸ்மாக் தொழிலாளியும்
ஒப்பந்த கூலியே.

நீதிமன்றங்களில்
சட்டப்படி 480 நாள்கள்
உழைத்தால் பணிநிரந்தரம்
ஒய்யார கூவுதலே.

ஆட்சி மன்றங்களில்
எதிர்கட்சியாய் இருக்கையிலே
உழைப்பாளிக்கு குரல் கொடுப்பது
ஒய்யார கூவுதலே.

பாரதத்தில்
உழைப்பவனின் போராட்டக்குரல்
என்றும் ஆள்பவர்களின் பார்வையில்
ஒப்பாரி கூவுதலே..

நாளைய பாரதத்தில்
உழைப்பவன் வெகுண்டெழுவான்
ஆள்பவர்களின் இல்லந்தோரும்
ஒப்பாரி கூவுதலே.

---------------*******************-----------------

 

உழைப்பாளரின் உதிரம்
குடிக்கும் அரசுகளையும்
அதிபர்களையும் இந்நாளில்
ஒழிப்பதற்கு சபதமேற்று
உழைப்பாளியை உயர்த்த
உறுதியேற்போம்.


உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.