புத்தக விமர்சனம்
புத்தகத்தின் பெயர்
: போரின் மறுபக்கம்
வெளியிடு : காலச்சுவடு பதிப்பகம்
விலை : ரூபாய் 200
ஆசிரியர் : தொ. பத்தினாதன்.
அனுபவமிக்கவர்கள்
நம்மிடம் “ உலகில் உன்னை விட வறுமையிலும் கஷ்டத்தில் இருப்பவர்களை பார்த்து நீ எந்தளவு
சுகபோகியாய் இருக்கின்றாய் என தெரிந்து கொள் ” எனக்கூறுவர். ஆம் இந்த புத்தகத்தினை
படித்ததால் சவால் விட்டு கூறுவேன் தமிழகத்தில் உள்ள மக்களில் ஆக கடைசி வறுமையாளர்களை
விட இலங்கை தமிழ் அகதிகள் மிகுந்த வறுமையிலும் மனகஷ்டத்திலும் உள்ளார்கள் என்று.
தொ. பத்தினாதன்
என்ற அகதியின் சுயசரிதையை படித்தபின்பு வலைதளங்களில் சினிமாவிற்கும்,பாலியல் கவிதைக்கும்
முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர்களை புளிச்ச ஏப்பகாரர்களாகவே பார்க்கின்றேன். அவர்
தன் எழுத்துக்களில் மனநோயாளியாய், பாதிக்கப்பட்டவர்களின் குரலாய், நண்பர்களுக்கு கடமைபட்டவராய்,
சக அகதிகளின் சூதாட்டகுணங்களையும், க்யூ பிரான்ச் போலிஸிற்கு பயந்த கூட்டமாய், மலம்
கழிக்கக்கூட இடமில்லாதவர்களாய் பலவழிகளில் அவர் தம் நடந்துவந்த பாதையில் நம்மையும்
புத்தகத்துடனேயே அழைத்து செல்கிறார்.