திருமங்கலம் இலக்கியப்பேரவை
சார்பாக “இலக்கியத்தில் நட்பு” என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்தனர். அதில் என்னையும்
சேர்த்து பலர் இதே தலைப்பில் பேச இருப்பதாக கூறினர். நட்பு என்ற தலைப்பில் பலருடன்
ஒருவராக பேசுவது என்றவுடன் தயங்கினேன். பின்பு அனைவரும் பேசும் தலைப்புகளை பார்த்த
பொழுது ஆண் பெண் நட்பு குறித்த இலக்கிய உரை
இல்லாதது கண்டேன். இன்று நாம் நவநாகரீக தேவைகள் அதிகம் உள்ள உலகத்தில் வாழ்கிறோம்.
இது குடும்பத்தில் ஆண் பெண் இருவரும் பணம் ஈட்ட வேண்டிய தருணம். இதில் பெண்கள் நாளும்
பல குணாதிசிய ஆண்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆண்களும் சரி பெண்களும் சரி தங்களுக்கிடையே எப்படி நட்பு கொள்வது மற்றும் நட்பினை தொடர்வது
என்று அவசியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதை மனதில் கொண்டு “நேருவின் நட்பு”
என தலைப்பில் பேசுவதாக பெயர் கொடுத்து உரையாற்றினேன். அதன் தொகுப்பினை கட்டுரையாக நமது
உழைப்பாளி தளத்தில் வெளியிடுகிறேன். படித்து கருத்துரையிடவும்.
நேருவின்
நட்பு
இந்தியாவின்
முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு. உலகம் இன்றும் இந்தியாவை நேருவின் பூமியாகவே பார்க்கின்றது.
ஆம் சென்ற ஆட்சி வரை நேரு குடும்பத்தின் கைவிரல் அசைவிலேயே இந்தியா நடை போட்டது. காரணம்
நேரு விதைத்த விதை. நேருவின் தன்னலமற்ற ஆட்சியும் அவர் நேர்மையும் தான் இதற்கு காரணம். நேரு உலகிற்கே நட்பு
குறித்து பாடம் நடத்தியுள்ளார். உலகமே ரஷ்யா, அமெரிக்கா என இரண்டாக பிரிந்து நின்றது.
ஆனால் நேருவோ இருவருடனும் சேராமல் அணிசேரா நாடுகள் என நட்பிற்கு இலக்கணம் வகுத்தார்.
இலக்கிய
உலகில் நேரு
நேரு சிறையில் இருந்த வண்ணம் தனது மகள்
இந்திராவுக்கு பல கடிதங்கள் வடித்தார். அந்த கடிதங்கள்
புத்தகமாக்கப்பட்டுள்ளன. "உலக வரலாறு' (Glimpses of World History) .
இந்தநூல் உலக பிரசத்தி பெற்றது. நேரு எழுதிய நூல்கள் " தி டிஸ்கவரி ஆப்
இந்தியா " , அவருடைய " சுயசரிதை " மற்றும் "டுவார்ட்ஸ் ப்ரீடம்"
முக்கியமானவையாகும். தமிழக கம்யூனிஸ்ட் கட்சி தோழர் எம்.கல்யாணசுந்தரம் நேருவின்
புத்தகத்தினை படித்தப்பின்பு தான் கம்யூனிசப்பாதைக்கு திரும்பியதாக கூறுகிறார்.
நேரு - எட்வினா நட்பு
அவைகள்
வருமாறு
1993-ல் காத்ரீன் கிளெமென்ட் என்ற பிரெஞ்சு
நாட்டுப்பெண் எழுத்தாளர் 'எட்வினா - நேரு' என்ற புத்தகம் எழுதினார். அதில் எட்வினா தனது கணவர் மெளன்ட் பேட்டன்க்கு நேரு
குறித்து கடிதம் எழுதியதாக கூறுகிறார். எங்கள் இருவருக்கும்
இடையே ஒரு மானசீகக் காதல் தான் இருந்தது' அது இருவருக்குமான இலக்கிய நட்பு என்று கூறியிருந்தார்.
உடன் காத்ரீன் இருவருக்குமான உறவு சிறிய அளவில்
இருந்தது என்றால் அதில் 'நெருக்கமான உறவு' கலந்திருந்ததா?" என்ற கேள்வி தொக்கி
நிற்பதாக சந்தேகம் எழுப்பி அதையே பின்பு உறுதியாக்கி விடுகிறார். வெறும் வாயிக்கு அவல்
கிடைத்தால் போதாதா? நம் ஊடக மற்றும் விமர்சகர்களுக்கு. அதற்கு பின்பு வந்த அனைத்து
இலக்கிய எழுத்துகளும் நேரு எட்வினா உறவினை கொச்சைப்படுத்தியே வந்தன.
நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷேகல்
இவ்வாறு கூறுகிறார் இருவருக்குமான உறவு காதலும் நட்பும் கலந்த, இரு மனங்கள் ஒன்று கலந்து
உறவாடிய ஓர் அபூர்வக் காதல். அதில் பாலியல் இருந்ததாக யூகிக்க மட்டுமே முடியும்" என்கிறார் ஷேகல். அடுத்தவர் கற்பு விசயத்தில் இவர்களின்
ஊகங்களை விளையாட விடுவதில் என்ன நியாயம் உள்ளது.
The Last Viceroy
of India என்ற திரைப்படம் புதிய கோணத்தில் நேரு எட்வினா நட்பினை பற்றி
கூறியது. நேரு எட்வினாவின் காதலை மெளன்ட் பேட்ன் அறிந்து இருந்ததாக கூறுகிறது. மேலும்
சுதந்திரதிற்கு பிறகு இந்தியாவை விட்டு செல்ல மனம் இல்லாமல் எட்வினா தவித்ததாக
காட்சிபடுத்தியது. மெளன்ட் பேட்ன் மிகவும் கெஞ்சி அழைத்து செல்வதாக
படம் அமைத்து எரிகின்ற நெருப்பில் கொல்லியை வைத்தது.
உண்மை என்ன?
தொடர்பான அலவலாவல் . அவர்களுக்கிடையே
இருந்தது ஆத்மார்த்தமான காதல். ஆன்மாவின் காதல் என்றார். தொடர்ந்து இப்போதெல்லாம் காதல்
என்றால் செக்ஸ் குறித்து தான் முதலில் பேசுகிறார்கள். ஆனால் அன்று அப்படி இல்லை, நேரு,
எட்வினாவுக்கு இடையேயும் அப்படி இல்லை. அது ஆத்மார்த்தமான காதல். ஆத்மாவுக்கும், ஆத்மாவுக்கும்
இடையே ஏற்பட்ட காதல். நேரு ஒரு கெளரவமான மனிதர். அடுத்தவர் மனைவியை, குறிப்பாக நண்பரின்
மனைவியை அவர் மயக்க நினைத்ததில்லை, அப்படிச் செய்யவும் இல்லை என்றார். அத்தோடு நேருவின் கொள்ளு பேரனான ராகுலுடன்
இருவரின் கடிதங்களை நாங்கள் பரஸ்பரம் மாற்றி வாங்கி படித்துள்ளோம் எனவும் கூறுகிறார் லார்ட்
ராம்சே. ஆம் சுதந்திரத்திற்கு பின்பு மௌன்ட்பேட்டன்
லண்டனில் நேரு டிரஸ்ட் என்ற அமைப்பினை துவங்குகிறார். மனைவியை கவரும் எண்ணம் இருப்பவருடன்
யாராவது தொடர்பில் இருப்பார்களா? இங்கே ட்ரஸ்ட் துவங்குகின்றார் என்றால் இருவருக்குமான
உறவு இலக்கிய நட்பு தான் என்பது உறுதியாகின்றது.
அனுமான
அசிங்கம்
மேலும் குல்தீப் நய்யார் இந்தியாவின் சிறந்த பிரதமர் நேரு என்றும் மோசமான பிரதமர் இந்திரா என்கிறார். ஆண் பெண் நட்புகள் அனைத்தும் காதலாகவே பார்க்கப்படுகின்றது. கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். இது முந்தைய தமிழர் கூற்று. இருவருக்குமான நட்பு இலக்கியம் சார்ந்ததாகவே இருந்திருக்கின்றது என்று நாம் நம்புவோமாக. அப்படியே இருவருக்குமிடையே தவறான நட்பு இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி இலக்கியம் படைத்து பணம் சம்பாரிப்பது அதைவிட தவறானச் செயல். சரி நேரு எட்வினா நட்பு குறித்து கண்டோம். இதில் நமக்கான பாடம் என்னவெனில், ஆண் பெண் நட்பு என்பது வளர்ந்து வரும் நமது நாட்டில் இனி தவிர்க்க முடியாது. சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. குடும்பநல நீதிமன்றங்களில் தம்பதிகள் விவகாரத்திற்கு 70 சதவீதமான காரணம். மனைவி ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசுகிறாள் கணவன் பெண் நண்பர்களுடன் செல்போனில் பேசுகிறான் என்பதே. இன்று கணவன் மனைவிக்கிடையே நல்ல புரிதல் இல்லை. தம்பதியர் நன்றாக வாழவேண்டிய காலங்களான இளம் வயதில் பிரிந்து இருந்து விட்டு முதுமையில் இணைவது இனிக்காது. அடிப்படை ஒழுக்கமும் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் எண்ணமும் இன்றி வாழ்தல் நலம். நேருவின் மனைவி கமலாவிற்கு பிடித்த சிவப்பு ரோஜாவை தனது வாழ்க்கை முழுவதும் ஆடையில் அணிந்த நேருவை அனுமானங்களால் அசிங்கம் செய்யாமல் இருப்போம்.
.
வஹாப் ஷாஜஹான்,
திருமங்கலம்.
No comments:
Post a Comment