மதுரை இந்த வார்த்தையை
கேட்டவுடன் உணர்ச்சி பெருமிதத்துடன் புலகாங்கிதம் அடைவேன். மதுரைக்காரன் என்ற பெருமை
என் மனதில் எப்பொழுதும் ஒரு மமதையே ஏற்படுத்தும். மதுரையை பற்றி தவறாகவும், சாதிய மேட்டிமை
கொண்டது என்றாலும் கண்டிப்பேன். தமிழகம் முழுவதற்குமான நிலையே மதுரையிலும் தொடர்கின்றது.
எம்.ஏ வரலாற்று மாணவனாக மதுரையின் தளவரலாறு படிக்கையில் மகிழ்வுற்றேன். பசுமைநடையின்
வாயிலாக மதுரையின் மூளை மூடுக்கெல்லாம் உள்ள தொல்லியல் தலங்களை கண்டு ரசித்துள்ளேன்.
பசுமைநடை, மதுரையை மேலும் காதலிக்க செய்தது. மதுரையின் பெருமை பற்றி கேட்டிருந்தாலும்
படித்திருந்தாலும் மதுரையின் தரவுகள் முடிவுறாத விசயமாகும். அமுதசுரபியாக இன்னும் பல
புதிய விசயங்கள் நாளும் அறிந்து வருகிறேன்.
அந்த வரிசையில்
பாண்டிய வரலாற்று ஆய்வு மையம் சார்பாக “மாமதுரை “ புத்தகம் வெளியீட்டு விழா நடைபெறுவது
அறிந்தேன். அய்யா சாந்தலிங்கம் மற்றும் இராசேந்திரன் இணைந்து மதுரையை குறித்து புத்தகம்
படைத்து இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.