Thursday, 3 January 2013

முறைப்படுத்திய பாலியல் தொழில் சாத்தியமா?


 

 

          முறைப்படுத்திய பாலியல் தொழில் சாத்தியமா?


டெல்லி மற்றும் தமிழகத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்பு இந்நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருக்க அறிஞர்கள் பலரும் பல்வேறு வகையில் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.அதில் பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் எனவும்,பெண்கள் கொஞ்சம் தங்களையும் (ஆடைகளையும்,இரவுபயணத்தினை தவிர்த்தல்) சரிப்படுத்திகொள்ளவேண்டும் எனவும்,இன்னும் சிலர் சட்டப்படியான முறைப்படுத்திய பாலியல் வடிகாலுக்கான பாலியல் தொழில் அங்கீகாரம் வழங்கவேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.இதில் முறைபடுத்திய பாலியல் தொழில் சாத்தியமா?என்பதனை மட்டும் நாம் எடுத்துகொள்வோம். காலம்காலமாக இருந்து வரும் பாலியல் தொழிலை முறைபடுத்த வேண்டும் என்றால் 2003 ல்-டாஸ்மாக்(மது விற்பனை) 2013 ல்-டாஸ்மாக்1 (பாலியல் தொழில்) அரசே துவங்கி நடத்தவேண்டும் என்று நினைக்கிறார்களோ?பாலியல் தொழில் முறைப்படுத்தப்பட்ட எந்த நாடுகளில் பாலியல் வன்முறை குறைந்துள்ளது.தமிழகத்தில் பெண்குழந்தைகள் பலர் தொடர்ந்து காணாமல் போவது குறித்த ஆய்வுகளில் பெண்சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டு விபச்சாரவிடுதிகளில் தள்ளப்படுவதாக கூறுகிறது.
"
ஒரு சாணு வயிற்றுக்கு தான் எல்லாத்தையும் விற்கிறேன்" இந்த பாடல் மூலமாவது பெண்கள் படும் கஷ்டநிலையை உணராதவர்கள் உண்டோ? பெண்களை சகமனிதராக மதிக்கும் எவரும் இந்த கூற்றிற்கு உடன்பட மாட்டார்கள்.மாறாக  இதற்காகவே அலையும் ஒரு கூட்டம் இது போன்ற பிரச்சனைகளில் இம்மாதிரியான ஆலோசனைகளை கூறிவருவதாக எண்ணுகின்றேன்.இது விஷ விதையாகும்.தவறான விசயங்கள் எதனையும் முறைப்படுத்த(சரிப்படுத்த) முடியாது.
பாலியல் தொழிலில் பெண்கள் மீண்டும் அடிமைவாழ்க்கையிலிருந்து கொத்தடிமைகளாக மாற்றப்படுவர்கள். தமிழகத்தில் டாஸ்மாக்கையே ஒழிக்கமுடியாமல் விழிபிதிங்கி வரும் நிலையில் இதுவேறா? அறியாமையில் இதற்கு குரல் கொடுத்தவர்கள் உடன் தங்களின் எண்ணங்களை மாற்றுதல் அவசியம்.

No comments:

Post a Comment