இறப்புக்கால உதவித் தொகை
தொழிலாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு இறப்புக்கால
உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்குவதற்கான தீர்மானம் தொழிலாளர் நல வாரியக்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் நலத் துறை அமைச்சர் செல்லபாண்டியன்
தலைமையில் நல வாரியத்தின் 74-வது கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின்
குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை உயர்த்தியும்,
தொழிலாளர்கள் பணிக்காலத்தில் இறந்து விட்டால் அவர்களின் குடும்பத்துக்கு இறப்புக்
கால உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கவும் கூட்டத்தில் தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இணக்க பேச்சுவார்த்தைக்காக
சென்னைக்கு வரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறைந்த வாடகையில் தங்குவதற்காக ஜீவா
இல்லம் கட்டப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அந்த இல்லத்தை
முன்னதாக அமைச்சர் செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.
தொழிலாளர் நலத் துறையில் பணிபுரிந்து இறந்த 9 பணியாளர்களின்
வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன உத்தரவுகளையும் அவர் வழங்கினார்.
தகவலுக்கு நன்றி !
ReplyDelete