Saturday, 7 April 2012

உள்ளாட்சி தேர்தல்


அண்ணணும் தம்பியும்
மாமனும் மச்சானும்
மல்லுக்கட்டும் தேர்தல்!

வேலை வெட்டி இல்லாமல்
ஊர் பஞ்சாயத்து பேசியவர்களுக்கு
வேலை கொடுத்திட்ட தேர்தல்!

பகல் முழுவதும் மது வாடை குறையாமல்
இரவு புரோட்டா கறியும் குவாட்டரும்
கொடுத்தனுப்பும் பசியறியா தேர்தல்!


இட ஒதிக்கீட்டால்
சேலைக்கு பின் நின்று வேஷ்டி வேலை செய்து
வென்றுவிட்டால் சேலையை வீட்டில் விட்டு
வேஷ்டியே மன்றகூட்டம் கலக்கும்
சமத்துவ தேர்தல்!

வென்றால் ,சங்கடங்கள் தீர்த்து சாதிப்பாரா?
எனப்பார்க்காமல் சாதி பார்த்து, மற்றும் மடமைதீர்ப்பாரா?
எனப்பார்க்காமல் மதம் பார்த்து ஓட்டளிக்கும்
சாதிமத தேர்தல்!

நாளை ஊழல் செய்திட
இன்றே வாக்காளருக்கு ரொக்கம் கொடுத்து
ஊழலை துவக்கிடும் தூய தேர்தல்!

வெல்க! ஜனநாயகம்.

.ஷாஜஹான்,திருமங்கலம்.99425 22470.
                   

Saturday, 24 March 2012

கலங்கரை விளக்கம்


கலங்கரை விளக்கம் நம் பார்வையில் பகலில்
பிரம்மாண்டம் இரவினில் வெளிச்சம்

நமக்கு ருசிகொடுக்க மீனவன்
ருது கொடுக்கவும் தயார் ஆகிறான்
நாம் குடும்பத்துடன் உணவருந்த
அவன் குடும்பம் பிரிகின்றான்
நமக்கோ உணவு, அவனுக்கோ வாழ்வு
அயல்நாட்டு மீனவனோ செயற்கைகோள்உதவியுடன்
மீன் பிடிக்கின்றான் எனில்நமது மீனவனோ
தினம் தினம் செத்து செத்து மீன்பிடிக்கின்றன்

அவன் வயிற்றுபாட்டிற்கும்நமக்கு வைட்டமின்
கொடுக்கவும் கட்டுமரம் கொண்டு கடல்
இறங்கும் மீனவன் புயல் சூறாவளிக்கு தப்பி,
அந்நிய ராணுவ துப்பாக்கி ரவைகளுக்கு தப்பி,
மீனவனின் பார்வையில்
கலங்கரை விளக்கம் கண்டால் தான்
தன் குடும்பம் மீண்ட மகிழ்ச்சி

கலங்கரை விளக்கம் நம் பார்வைக்கு
பகலில் பிரம்மாண்டம் இரவினில் வெளிச்சம்.

.ஷாஜஹான்,

கண்ணீர் தேசம்


வியாபாரி ஆங்கிலேயன்
அதிகாரம் செய்த பொழுது சுதந்திரம்
கேட்ட அன்றைய இந்தியன் முந்தைய
கண்ணீர் தேசத்து மனிதன்.

அதிகார வர்க்கம், அரசியல்வாதி
போலி புரோகிதர்களிடமும் சிக்கி
தவிக்கும்இன்றைய இந்தியன் புதிய
கண்ணீர் தேசத்து மனிதன்.

நாடு வளம் பெற அனை கட்டியது அந்த காலம்
அண்டை மாநிலத்திற்கு நீர் வழங்க மறுத்து
அனை கட்டிவரும் இன்றைய இந்தியன் நவீன
கண்ணீர் தேசத்து மனிதன்.

சுதந்திரம் கேட்ட நமது சகோதரர்களின்
கருவருத்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள
வரவேற்பு அளிக்கும்இன்றைய இந்தியன் அதி நவீன
கண்ணீர் தேசத்து மனிதன்.

கிராமங்களின் உயர்வு இந்தியாவின் உயர்வு எனகூறிய
காந்திதேசத்தில் நகருக்கு இனணயாககிராமங்கள் தோறும்
"
டாஸ்மாக்"கடைதிறந்தஇன்றைய இந்தியன் கணினி உலக
கண்ணீர் தேசத்து மனிதன்.

உன் லட்சியம் தலைவர் யார் என வினா எழுப்பினால் உலகின்
உன்னத வழிகாட்டிகாந்திஜீஇருக்க டாடாவும் பிர்லாவும்
அம்பானி என கூறும்இன்றைய இந்தியன் கரன்சிஉலக
கண்ணீர் தேசத்து மனிதன்.

வாழும் காலங்களில் எப்படியாவது
சுதந்திர காற்றை சுவாசிக்க நினைக்கும்
மனிதர்களின் புண்ணியபூமி இந்தியா.


அஹிம்சா அரசன்காந்திஜீயின் கொள்கையை ஏந்தி பிடிக்காத
இந்தியன் என்றுமே உலகின் பார்வையில்
கண்ணீர் தேசத்து மனிதனே!


.ஷாஜஹான்.