Saturday, 7 April 2012

உள்ளாட்சி தேர்தல்


அண்ணணும் தம்பியும்
மாமனும் மச்சானும்
மல்லுக்கட்டும் தேர்தல்!

வேலை வெட்டி இல்லாமல்
ஊர் பஞ்சாயத்து பேசியவர்களுக்கு
வேலை கொடுத்திட்ட தேர்தல்!

பகல் முழுவதும் மது வாடை குறையாமல்
இரவு புரோட்டா கறியும் குவாட்டரும்
கொடுத்தனுப்பும் பசியறியா தேர்தல்!


இட ஒதிக்கீட்டால்
சேலைக்கு பின் நின்று வேஷ்டி வேலை செய்து
வென்றுவிட்டால் சேலையை வீட்டில் விட்டு
வேஷ்டியே மன்றகூட்டம் கலக்கும்
சமத்துவ தேர்தல்!

வென்றால் ,சங்கடங்கள் தீர்த்து சாதிப்பாரா?
எனப்பார்க்காமல் சாதி பார்த்து, மற்றும் மடமைதீர்ப்பாரா?
எனப்பார்க்காமல் மதம் பார்த்து ஓட்டளிக்கும்
சாதிமத தேர்தல்!

நாளை ஊழல் செய்திட
இன்றே வாக்காளருக்கு ரொக்கம் கொடுத்து
ஊழலை துவக்கிடும் தூய தேர்தல்!

வெல்க! ஜனநாயகம்.

.ஷாஜஹான்,திருமங்கலம்.99425 22470.
                   

No comments:

Post a Comment