Sunday, 30 April 2017

கோடைக் கொண்டாட்டம்

எனது பள்ளி,கல்லூரிக்கால பழைய பொக்கிஷங்களை பாதுகாக்கும் பெட்டகம் ரங்கூன் டிரக்பெட்டி.. எனது தாத்தாவின் அப்பா பிரத்யோகமாக உபயோகித்து பர்மாவிலிருந்து கொண்டு வந்தது இப்பெட்டி. பெட்டியை அண்டாக்கா கசம் அபூக்கா ஹூக்கும் என திறந்தால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புத்தகத்திற்கு வழங்கும் பளபளக்கும் வண்ணப்படங்களில் பீலே, மரடோனாவின் காட்சிஇருவரும் 3டி ஸ்டைலில் கால்பந்து உதைக்க டிரக் பெட்டியை விட்டு வெளியே வந்து பல பழைய நினைவுகளை நினைவுறுத்தின. இனிப்பான  கேசரியை கிளறி முந்திரியை தேடி எடுத்து உண்பது போன்றது நம் நல்ல பல பழைய நினைவுகளை அசைபோடுவது.