Wednesday, 29 October 2014
தெப்பக்குளத்து மிதவை நடை.
இறகுகள் முளைத்திட்ட பொழுதினில்1.
மதுரை சூழலியல் சந்திப்பு காந்தி
அருங்காட்சியகத்தில் நடைபெறுகின்றது என கேள்விபட்ட நேரத்தில் என்ன நிகழ்வு இது கலந்துதான்
பார்போமே என கிளம்பினேன். புலவர் பிசிராந்தையார் தாம் பாடும் பாடலில் “கோடு கூடு மதியம்
முகிழ் நிலா விளங்கும் மையல் மாலை” என்கிறார். அதாவது மாலையில் பறவைகள் தங்கள் கூடுகளை
அடையும் இயல்பினைக் சங்ககாலத்தில் அழகாக விவரிக்கின்றார். அதே நேரத்தில் காந்தி அருங்காட்சியகத்திற்குள்
நுழைந்த நான் போட்டி தேர்வாளர்கள் தங்களை தயார் செய்து கொண்டு இருந்து அவர்களும் பறவைகளை
போல் தங்களது இல்லங்களுக்கு கிளம்பி கொண்டு இருந்தமையையும் காந்திபிரானையும் பார்த்தவண்ணம் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தேன்.
அங்கு நான் கண்ட அரங்க காட்சியானது
பறவைகளின் கூட்டினை ஒத்ததாக அமைந்திருந்தது. மின்தடையின் காரணத்தினால் இருட்டாகவும்
ஆர்வத்துடன் வந்திருந்த சிறுவர்களும் பங்கேற்பாளர்களும் தங்களுக்குள் மென்மையான குரலில்
பேசிக்கொண்டிருந்தது பறவைகளின் கீச்சிடும் குரலுக்கு ஒப்பாக அமைந்தது. நிகழ்ச்சியினை
ஆரம்பிக்க மின்சார எதிர்பார்ப்பில் காத்திருந்து பின்பு மின்தடையிலும் 5.30 மணியளவில்
தங்களை காக்க வைத்தமைக்கு மன்னிக்கக்கூறி நிகழ்வினை
துவங்கினர். முதல்நிகழ்வாக நாணல் நண்பர்கள் திரு.தமிழ்தாசன் நிகழ்ச்சியின் நோக்கத்தினையும்
அவசியத்தினையும் விளக்கினார்.
Wednesday, 8 October 2014
பாறைத் திருவிழா
பாறைத் திருவிழா
மழையோடு மகிழ்வாக
பந்த் தனை பந்தாடி
நிகழ்ச்சி நிகழாதென
குறுஞ்செய்தியில்
குழப்பினாலும்
பசுமைநடையினர்
பாங்கோடு
குவிந்தனரே குயில்குடியில்
பார்வையாளர்கள்
பாராட்ட
தெப்பத்து தாமரை
அழகினை ரசிப்பதா?
மலைகோவில் சிலைகளை
ரசிப்பதா?
ஆலமரத்து அழகினை
ரசிப்பதா?
குயில்குடி குருவிகளை
ரசிப்பதா?
குழந்தைகளின் குதுகுலங்களை
ரசிப்பதா?
அமுதமென அன்னமிட்டதனை
ரசிப்பதா?
பேரமுத பேச்சினை
ரசிப்பதா?
இடர்பாடுகளை இன்முகத்துடனும்
அவசர சிகிச்சையில்
அப்பாவினையும்
கவலைகளை களைகளாய்
கலைந்த
முத்துவின் தலைமையினை
ரசிப்பதா?
முத்துவுடனே முத்துகுளித்த
முத்தான பசுமைநடையாளர்களை
ரசிப்பதா?
ரசிப்பதில் ரசாபாசத்தினை
உருவாக்கிட்ட
பசுமைநடையின் பாறைத்
திருவிழா
அடுத்த விழாவிற்கு
அச்சாரம் போட்டாலும்
விடாது விரட்டும்
இனிய நிகழ்வாய்
பாறைத் திருவிழா!.
உங்கள் வஹாப் ஷாஜஹான்,
திருமங்கலம்.
Subscribe to:
Posts (Atom)