Friday, 1 February 2013

அன்னமிட்டவர்களின் அண்மைநிலைமை



அன்னமிட்டவர்களின் அண்மைநிலைமை
தமிழகத்தில் இன்று விவசாயநிலங்கள் அனைத்தும் பொய்த்து போய் நமக்கு அன்னமிட்டவர்கள் பலர் இன்று தற்கொலை முடிவுக்கும், மற்றும் சிலர் வேலை தேடி இடம்பெயரவும் முடிவெடுத்துள்ளனர். இதில் மத்திய மாநில அரசுகள் இன்றைய நிலைகளை மூடிமறைக்கும் வேலையிலும் தங்களுக்கிடையே ஈகோ பார்த்து விவசாயிகளை முற்றும் ஒழித்துவிடும் பணியினை செய்துவருகின்றனர்.  தமிழகமே இன்று வறட்சி பாதித்த பகுதியாக அமைத்துவிட்ட நிலையில்
விவசாயிகளின் நிலைதனை மனதில்கொண்டு ஏதாவது நிவாரண ஏற்பாட்டினை செய்ய வேண்டிய அரசுகள் நீதிமன்றங்களில் விவசாயிகளின் தற்கொலைக்கு மனநோயும் வீட்டுபிரச்சனைகளும் காரணமென கூறி வருவது

கட்டுச்சோற்றுக்குள் முழுபூசணியை மறைப்பதை போன்றுள்ளது. தமிழகத்தினை மாறிமாறி ஆளும் இந்த இரண்டு கட்சியினரும் தங்களுக்கிடையே மற்றவர் ஆட்சியில் எதிர்கட்சியாக இருக்கும்பொழுது கஞ்சி தொட்டி திறப்பதும் பின்பு ஆட்சிக்கு வந்து விட்டால் விவசாய வளர்ச்சிக்கென எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதும் தொடர்ந்து வருகின்றது
.
வறட்சியால் விவசாயம் பாதித்த நிலையில், மாற்று வேலை தேடி, வெளி மாநிலங்களுக்கு செல்ல, டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள், ஐந்து லட்சம் பேர் செல்லக் கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிக அளவில் இல்லை. விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களே உள்ளன. பொய்த்தது சாகுபடி தற்போதைய கணக்குப்படி, டெல்டா மாவட்டங்களில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் உள்ளனர்.இந்த ஆண்டில், வறட்சியால் விவசாயம் பாதித்ததால், அதிர்ச்சிஅடைந்த 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

 

குறுவை, சம்பா சாகுபடி பொய்த்ததாலும், அடுத்த குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாததாலும், என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளர்களும் தவித்து வருகின்றனர்.

 

கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் சூளைகளில் கல் அறுப்பு, கட்டட வேலை உள்ளிட்டவை செல்வதற்கு, ஐந்து லட்ச ம் தொழிலாளர்கள் தயாராகியுள்ளனர்.தமிழகத்தில் மின்வெட்டு காரணமாக தொழில்கள் முடங்கிஉள்ளதால், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லாமல், வெளிமாநிலங்களுக்கு செல்லும் முடிவை விவசாய தொழிலாளர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

 

உன் நண்பனைக் காட்டு உன்னைப்பற்றி கூறுகின்றேன் என்பர். அதுபோன்றே உழைக்கும் விவசாயின் நிலையைக் கொண்டே அந்த நாட்டின் நிலைதனை அறியலாம்.தற்பொழுது அவசரகதியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளைக்
கொண்ட குழுவினை அனுப்பி நிலையினை அறியும் அரசு விவசாயிகளின் இன்றைய நிலையில் அவர்களின் வாயினை அடைப்பதற்கான முயற்சியினை மட்டும் எடுக்காமல் எதிர்காலத்திலும் இந்த நிலைமை நீடிக்காமல் இருக்கவும்
பின் எப்போழுதும் இந்நிலை ஏற்படாமல் இருக்க வழிவகையினை செய்யவேண்டும்

No comments:

Post a Comment