சமீபத்தில்
ஒருநாள் இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போது
ஒரு கவிதை என் கண்ணில்பட்டது.
தலைப்பே ஒரு ஏக்கத்துடன்… வேண்டுகோளுடன்
இருக்க அந்த கவிதையை படிக்க
ஆரம்பித்தேன். கவிதையைப் படித்து முடித்த போது,
என்னை அறியாமல் என் மனம் கனத்துவிட்டது.
இந்த கவிதையை யார் எழுதினார்கள்
என்று தெரியவில்லை. இந்த கவிதையை எழுதியிருந்தவர்
யாரா இருந்தாலும் அவங்களுக்கு என் சிரம் தாழ்ந்த
நன்றிகளும்… வாழ்த்துகளும்… என்னைக் கலங்க வைத்த
கவிதை இதுதான்…
Tuesday, 29 October 2013
Tuesday, 3 September 2013
உழைப்பே வீரம்!
ஒருநாள்
அக்பர் தனது அவையில் அமர்ந்து
இருந்தார். அவையில் இருந்தவர்களைப் பார்த்து,
"உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்? அவர்களுக்கான இலக்கணம்
என்று எதனைக் கருதலாம்?" என்று
கேட்டார்.
"மாபெரும்
சேனை ஒன்றை ஐந்தாறு வீரர்களை
மட்டும் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று சமாளித்து
வெற்றி பெறும் தளபதியே மாபெரும்
வீரர்!" என்றார் ஒருவர்.
"தாம்
ஆயுதம் வைத்திருக்காத நிலையிலும் எல்லா ஆயுதங்களும் வைத்திருக்கும்
ஒருவனை எதிர்த்துப் போரிட்டு வெள்ளி கொள்பவனே சிறந்த
வீரன்!" என்றார் இன்னொருவர்.
"போர்
முனையில் போரிட்டு வீர மரணம் அடைந்த
அனைவருமே வீரர்கள்தான்!" என்பது இன்னொருத்தரின் பதில்.
இவ்வாறு
ஒருவர் பின் ஒருவராக பதில்
அளித்துக் கொண்டிருக்க பீர்பால் மட்டும் அமைதியாக இருந்தார்.
அது அக்பருக்கு ஆச்சரியத்தினை அளித்தது.
"பீர்பால்.
என் கேள்விக்கு என்ன பதில்?" என்றார்
அக்பர்.
Tuesday, 27 August 2013
பசுமை நடை.
நமது தமிழகத்தில் இலக்கிய மற்றும் அரசியல்
ஆர்வமுடைய பலரையும் நான்மாடக்கூடல் என அழைக்கப்படும் மா
மதுரையானது சென்ற ஞாயிறு (ஆகஸ்டு
25,2013) தன்னகதே திரும்பி பார்க்கச்செய்துள்ளது.இன்றைய பெரும்பாண்மை இளைஞர்
சமுதாயம் தங்களது திரை நட்சத்திரகளின்
படங்கள் வெளிவராததற்கு சாலை மறியலும் மற்றும்
சினமா நடிகர் நடிகைகளை தலைவர்களாகவும்
தங்களது மத சாதி தலைவர்களின்
கண்ணசைவில் பலர் தலைகளை கொய்யக்கூடிய
கூட்டத்தினராகவும்,அரசியல் என்ற பெயரில்
சிலகுடும்பங்கள் முன்னேறவும்,கொள்கைகளை கொள்ளைபுறம் தூக்கிவீசிவிட்டு இருக்கும் அரசியல் கட்சிகளிடம் தலையாட்டி
பொம்மைகளாகவும் இருந்து வரும் நிலையில்
மூதூர் மதுரையில் ஓர் இளைஞரின் முயற்சியில்
மிகப்பெரிய மாற்றத்தினை சந்தித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)