சூரியன் எத்திசையிலிருந்து
உதிக்கின்றது என என்னிடம் கேட்டால் எனக்கு விபரம் தெரிந்த காலம் முதல் அது விருதுநகரிலிருந்து
தான் என அடித்துக்கூறுவேன். எப்பொழுதுமே நம்ம ஊரு நமக்கு சொர்க்கம் தான். மனைவியின்
ஊரு மட்டம் தான். எங்கள் வீட்டு பெண்களான அம்மா, மனைவியின் பிறப்பிடம் விருதுநகர்.
என் அப்பாவின் வழிநடத்துதல் காரணமாக சிறுவயது முதலே விருதுநகர் என்றாலே எட்டிக்காய்
தான்.
திருமங்கலம் விருதுநகர் பாதையில் சிவரக்கோட்டையை
சாலைப் பயணங்களில் பார்த்தது தான். ஊருக்குள் சென்றது இல்லை. சென்று பார்க்கும் ஆர்வமும்
எப்போதும் இருந்ததும் இல்லை. சென்ற நவம்பர் மாதத்தில் பறவைபார்வையிட சிவரக்கோட்டைப்பகுதி
என அழைப்பு வந்தது.Thursday, 5 February 2015
Monday, 19 January 2015
படையல் ருசிச்சு பாரு
சென்னையில் புத்தகக்கண்காட்சி
துவங்கி வாசிப்பின் அவசியத்தினை தமிழ் உலகிற்கு அறைகூவல் கொடுத்து வருகின்றது. தமிழ்
எழுத்து உலகமே தனது படைப்புகளை சென்னை நோக்கி திருப்பி கொண்டுள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக
ஓர் நிகழ்வு. மதுரை செக்கானூரனியில் காலை சூரியன் தனது கதிர்களை விரிக்க துவங்கிய தருணத்தில்
நெற்கதிர்கள் விளைந்த வயல்வெளிக்கு நடுவே கதிர்
பொங்கல் மலர் 2015 “படையல்” வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் மதப்பண்டிகைகளான
தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பொங்கலுக்கு
கொடுக்கப்படுவதில்லை. அதிக நாட்கள் பொங்கலுக்கு அரசு விடுமுறை விடப்பட்டாலும் முக்கிய
பண்டிகையாக கொண்டாடப்படுவதில்லை. பத்திரிக்கை உலகமும் தீபாவளி மலருக்கு கொடுக்கும்
முக்கியத்துவம் பொங்கல் மலருக்கு கொடுப்பதில்லை. தற்பொழுது அந்த நிலை சற்று மாறி வருகின்றது.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் மலர் கண்டிப்பாக வெளியிட வேண்டும்
என்று உறுதி எடுத்ததன் பலனாய் உதித்தது தான்
கதிர் பொங்கல் மலர். புதிதாக எழுத துவங்கிய திருமங்கலம் இலக்கிய சகோதரர்களிடம் படைப்புகளை
பெற்று அதனை வெளியிட்டது மேலும் சிறப்பு.
Friday, 16 January 2015
பொங்கல் விழா
இயற்கை செல்வங்கள்
வழங்கிய கொடைகளுக்கு கைமாறு பொங்கல். நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் திருவிழா சற்றே
இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. தங்களின் தாத்தாக்களின் தாத்தா வாழ்ந்த கிராமங்களை
பற்றி நகரத்தினர் யாரும் நினைக்கக்கூட நேரமில்லை. நாம் உண்ணும் உணவினை கொடுக்கும் உழவர்கள் வாழும்
உன்னதமான கிராமத்தினையும், வயல்வெளிகளையும் பார்வையிடும் எண்ணம் கூட நம் நகர மக்களிடம்
இல்லை. நகர மக்கள் பலரும் தங்கள் பகுதிக்கு 10 கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்தினை கூட
காண செல்வது இல்லை. கிராமங்களைப் பற்றி கேட்டதினையும், படித்ததினையும், திரைப்படங்கள்
மூலமும் கிராமம் என்றால் இப்படி தான் என்று நினைத்து வாழ்ந்து வருகின்றனர். கிராம மக்களும்
தங்கள் பகுதிக்கு அருகில் புதிதாக உருவாகும் நகரங்களின் மாதிரிகளை கொண்டு தங்களை மாற்றி
வருகின்றனர். இந்நிலையில் நகரின் தொண்மையான பகுதிகளுக்கு அழைத்து சென்று அதன் வரலாற்றினை
உலக அறிய செய்யும் அமைப்பு பசுமைநடை இது தாங்களறிந்ததே.
Subscribe to:
Posts (Atom)