மதுரை, வரிச்சூர்
இயற்கை சார்ந்த சூழல் உலாவில் மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன். சமணச்சின்னம் ம.குன்னத்தூர் என்ற அரசு விளம்பரப்பலகை
கண்டு நின்றோம். அங்கிருந்து பார்த்த பொழுது இயற்கையான பெரிய குகைத்தளம் இருந்தது.
குகையில் சமணத்துறவிகள் வாழ்ந்ததற்கான படுகைகளும், மருந்து தயாரிக்க பயன்படுத்திய குழிகள்
இருந்தன. குகையின் மேல் நெற்றிப் பகுதியில் மூன்று பிராமி கல்வெட்டுகள் சிதைந்த நிலையில்
உள்ளன. இந்த பிராமிகல்வெட்டுக்கான விளக்க பலகை ஒன்றும் உள்ளது. இங்கு தங்கியிருந்த
சமணர்களுக்கு நூறுகலம் நெல் வழங்கியதாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. நூறுகலம்
நெல் வழங்கப்பட்டது என்றால் குறைந்தது சுமார் 50 சமணர்கள் தங்கியிருக்கலாம்.
Wednesday, 21 October 2015
Friday, 16 October 2015
வரிச்சூர் குடைவரை
திருமங்கலத்திருந்து பி.கே.என் கல்லூரி, விடதக்குளம், விருசங்குளம், ஒத்த ஆலங்குளம்,
பெரிய ஆலங்குளம், வளையபட்டி வழியாக அவனியாபுரம் வந்தடைந்தோம். அதிகாலை பொழுதினை கிராமங்களில்
குளிப்பதற்கு வெந்நீர் போடுவதும் வயலுக்கு
செல்வதுமான காட்சிகள் தொடர்ந்தன. அவனியாபுரத்தில் விமானம் ஓடுபாதையிலிருந்து பயணிகளை
இறக்கிவிடும் பகுதிக்கு ஊர்ந்துகொண்டிருந்தது.
காலை பொழுதிலும் நெடுஞ்சாலை பயணிகள் பலர் கார்களை நிறுத்தி விமானம் பார்த்து
கொண்டிருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)