அமெரிக்காவின்
டைம் பத்திரிக்கை கடந்த 2014 ம் “ஆண்டின் சிறந்த மனிதர்” விருதினை அறிவித்துள்ளது.
விருதானது எபோலா பாதித்தவர்களுக்கு மருத்துவ சேவை அளித்த மருத்துவக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த மனிதர் விருதிற்கான இணைய வாக்கெடுப்பில் இந்திய பிரதமர் மோடி மற்றும் உலகம்
முழுமைக்குமான பிரபலங்கள் இருந்தனர். ஆனால் விருதானது தங்கள் உயிரை துச்சமென மதித்து
பணியாற்றிய எபோலா மருத்துவக்குழுவிற்கு வழங்கியது டைம். எபோலா மருத்துவக்குழுவினை வாழ்த்துவோம். வாஷிங்டன் செய்தி பார்தோம் சரி அப்ப
நாம வாசிக்கும் ஆனந்தவிகடன் பத்தியும் பாப்போம் வாங்க. 2014 டாப் 10 மனிதர்கள் விருது ஆனந்தவிகடனும் வழங்கியுள்ளது.
நமது
சிவரக்கோட்டை ராமலிங்கம் அய்யாவிற்கு விகடன் இதழ் தமிழகத்தின் டாப் 10 மனிதர் விருது
வழங்கியுள்ளது. இவ்விருதினை எளிதில் பெற்றுவிட
வில்லை அய்யா அவர்கள். சிவரக்கோட்டையினை சிங்கப்பூராக மாற்ற போவதாக அரசு அறிவித்தது.
அதற்கு 1478 ஏக்கருக்கு சிறிய,நடுத்தர பெரிய தொழில் நிறுவனங்களை நிறுவ உள்ளதாக அறிவித்து
விவசாய நிலங்களை அரசே கையகப்படுத்தும் சூழ்நிலையை சென்ற கட்டுரையில் படித்திருப்பீர்கள்.