Sunday, 31 March 2013

போன மச்சான்.....நிலை என்ன?



நாடு விட்டு நாடு சென்ற உழைப்பாளியின் யதார்தநிலை.

மக்கள் தொகையும், வறுமையும் ,வேலை வாய்ப்பின்மையும் அதிகமாக வாட்டி வதைக்கும் நமது பாரதத்தில் தமிழ் சமுதாயத்தினர் பலர் இன்று அதிகம் கடைபிடிக்கும் தாரகமந்திரமானது "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு".வீட்டிற்கு ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கும் நிலையும் வீட்டினை பூட்டி விட்டு வீட்டில் உள்ள அனைவரும் வெளிநாடு சென்றுள்ள நிலையினையும் பல கடலோர தமிழக கிராமங்களில் காணலாம்.திருமணம் முடித்த கையோடு சவுதி சென்றவன் தான் குழந்தை பள்ளி செல்லும் போது தான் மீண்டும் வருகின்றான்.ஊரிலிருந்து மீண்டு வந்த மகிழ்ச்சியில் குழந்தையை கட்டி அனைத்தால் அப்பாவை கண்டு குழந்தைகள் அரண்டு பயந்த காட்சியை எழுத்தினால்
புரிய வைக்க முடியாது.கண்டால் கண்கள் குளமாகும்.விமான நிலையத்தில் பிரியும் புதுமண தம்பதியர்களின் கண்ணீரினை எழுத்துகளுக்குள் கொண்டுவரமுடியாது. வட்டிக்கு பணம் பெற்று இவ்வாறு வேலைக்கும் செல்லும் தொழிலாளி அங்கு படும் கஷ்டங்கள் சொல்லில் அடங்காது.இருந்தும் அங்கிருந்து வரக்கூடிய பணத்தினை கொண்டு இந்த கண்ணீருக்கெல்லாம் மருந்திட்டுகொள்கின்றனர். இவ்வாறு நாடு விட்டு நாடு சென்று சம்பாதிக்கும் இதற்கும் தற்பொழுது
பிரச்சனை வந்துவிட்டது.

சவுதி அரேபியா ஒர் பார்வை.


இது ஒரு முடியரசு ஆட்சியினை கொண்டது.இதில் 25.721 பில்லியன் மக்களை கொண்டது.60 சதவித மக்களே எழுத்தறிவு பெற்றவர்கள்.அரேபியா தீபகற்பத்தில் 5ல்4 பகுதி சவுதி அரேபியாவில் அடங்கியுள்ளது.உலக பெட்ரோல் உற்பத்தியில் 25% சவுதி அரேபியா விலிருந்தே கிடைக்கின்றது.இந்த பெட்ரோல் உற்பத்திக்கும் விளைபொருட்கள்(பேரீட்சை,பார்லி,கோதுமை) விவசாயத்திற்கும்,கால்நடைகள் வளர்பிற்கும் இஸ்லாமிய புனிதத்தலம் வரும் பயணிகளின்
பராமரிப்பிற்கும் இந்த நாடு இந்தியா உள்ளிட்ட பல நாட்டினர் 2பில்லியன் பேர்களுக்கு மேல் வேலைக்கு அமர்த்தியுள்ளது.ஆனால் அந்த நாட்டினர் சுமார் 30லட்சம் பேர்வரை தற்பொழுது வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

நிதாகத் சட்டம்.

இந்த வேலைவாய்ப்பின்மையை காரணமாக கொண்டு சவுதி அரேபியாவில் 2011 ல் நிதாகத் எனற சட்டம் மூலம் சொந்த நாட்டினருக்கு வேலைவாய்ப்பினையும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஏற்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டது சவுதி அரசு.இந்த நிதாகத் சட்டமானது சவுதியில் 10 பேர்களுக்கு மேல் வேலைவாங்கும் கம்பெனிகளில் 10 சதவீத பணிகளுக்கு சவுதி அரேபியாவினை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கவேண்டும் என்கிறது.அது மட்டுமில்லாது
2011 ல் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவர குறிப்பிட்ட காலக்கெடுவும் கொடுத்துள்ளது.

பழி ஒருபுறம் பாவம் ஒரு புறம்.

உலகம் முழுவதுமே தொழிலாளர் நலன் கருதி எடுக்கும் எந்த தொழிலாளர் சட்டங்களையும் பின்பற்றாத நிலைபோன்றே சவுதி தொழிலதிபர்கள் இந்த சட்டத்தினை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.சுமார் இரண்டரை லட்சம் சவுதிகம்பெனிகள் இச்சட்டத்தினை நடைமுறை படுத்தாத காரணங்களால் அக்கம்பெனியில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு பணி உரிமம்களை புதுப்பிக்க முடியாது எனவும் பணி உரிமம் முடிந்த அனைவரும் உடன் நாடு திரும்பவேண்டும் எனவும் அவ்வாறு நாடு திரும்பாதவர்கள் கைது செய்து நாடுகடத்தப்படுவார்கள் என கூறி தற்பொழுது பல பகுதிகள் தீடீர் சோதனைகளை செய்து வெளிநாட்டினரை வெளியேற்றி வருகின்றது சவுதி அரசு. சவுதி தொழிலதிபர்களின்
தொழிலாளர் நலன் பேனும் தன்மையில்லாததால் தொழிலாளர்கள் 2பில்லியன் மேற்பட்டவர்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீர்வு தான் என்ன?

சவுதியின் பல புதியதொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்த இந்த தொழிலாளர்கள் எந்தவித தவறும் இலைக்கவில்லை இருந்தும் தொழிலதிபர்களின் தவறுக்கு இவர்கள் பழியாவது எந்தவகையில் நியாயம்.தவறு இழைத்த
தொழிலதிபர்களுக்கு அபராதம் விதித்து அதன் முலம் சவுதியில் வேலையற்ற இளைஞர்களுக்கு உதவிதொகை வழங்கி உதவலாம்.ஏற்றிவிட்ட ஏணிகளாக இருக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை வெளியேற்றும்
நடவடிக்கையினை சிறிது காலநீடிப்பு செய்ய அனைத்து உலக நாடுகளும் வேண்டலாம்.

Thursday, 7 March 2013

மீன் பேசுகிறது....


மீன் பேசுகிறது....

பெண்ணின் கருவிழியை
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

செத்து கருவாடானாலும்
சுட்டு சாப்பிடுகின்றானே
மனிதன்.

கோவைபழம் பேசுகிறது....

பெண்ணின் உதடுகளோடு
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

குருவி கொத்த முன்னால்
என்னை கபளீகரம் செய்கிறானே!
மனிதன்.

கீளி பேசுகிறது....

பெண்ணின் கீச்சுகுரலோடு
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

சுதந்திரமாய் பறந்துவந்த என்
இனத்தை கூண்டோடுஅழிக்கின்றானே!
மனிதன்.

வாழைமரம் பேசுகிறது....

பெண்ணின் தொடைஅழகோடு
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

என் உடம்பில் எதையுமே
விடாமல் எச்சில் செய்கிறானே!
மனிதன்.

 

 .ஷாஜஹான்,99425 22470.
திருமங்கலம்.மதுரை.