Tuesday, 29 October 2013

திரும்பி விடு துபாய் கணவா…!

சமீபத்தில் ஒருநாள் இணையத்தில் உலவிக் கொண்டிருந்த போது ஒரு கவிதை என் கண்ணில்பட்டது. தலைப்பே ஒரு ஏக்கத்துடன்வேண்டுகோளுடன் இருக்க அந்த கவிதையை படிக்க ஆரம்பித்தேன். கவிதையைப் படித்து முடித்த போது, என்னை அறியாமல் என் மனம் கனத்துவிட்டது. இந்த கவிதையை யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை. இந்த கவிதையை எழுதியிருந்தவர் யாரா இருந்தாலும் அவங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகளும்வாழ்த்துகளும்என்னைக் கலங்க வைத்த கவிதை இதுதான்

Tuesday, 3 September 2013

உழைப்பே வீரம்!

ஒருநாள் அக்பர் தனது அவையில் அமர்ந்து இருந்தார். அவையில் இருந்தவர்களைப் பார்த்து, "உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்? அவர்களுக்கான இலக்கணம் என்று எதனைக் கருதலாம்?" என்று கேட்டார்.
 
"மாபெரும் சேனை ஒன்றை ஐந்தாறு வீரர்களை மட்டும் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று சமாளித்து வெற்றி பெறும் தளபதியே மாபெரும் வீரர்!" என்றார் ஒருவர்.
 
"தாம் ஆயுதம் வைத்திருக்காத நிலையிலும் எல்லா ஆயுதங்களும் வைத்திருக்கும் ஒருவனை எதிர்த்துப் போரிட்டு வெள்ளி கொள்பவனே சிறந்த வீரன்!" என்றார் இன்னொருவர்.
 
"போர் முனையில் போரிட்டு வீர மரணம் அடைந்த அனைவருமே வீரர்கள்தான்!" என்பது இன்னொருத்தரின் பதில்.
 
இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பதில் அளித்துக் கொண்டிருக்க பீர்பால் மட்டும் அமைதியாக இருந்தார். அது அக்பருக்கு ஆச்சரியத்தினை அளித்தது.
 
"பீர்பால். என் கேள்விக்கு என்ன பதில்?" என்றார் அக்பர்.
 

Tuesday, 27 August 2013

பசுமை நடை.


நமது தமிழகத்தில் இலக்கிய மற்றும் அரசியல் ஆர்வமுடைய பலரையும் நான்மாடக்கூடல் என அழைக்கப்படும் மா மதுரையானது சென்ற ஞாயிறு (ஆகஸ்டு 25,2013) தன்னகதே திரும்பி பார்க்கச்செய்துள்ளது.இன்றைய பெரும்பாண்மை இளைஞர் சமுதாயம் தங்களது திரை நட்சத்திரகளின் படங்கள் வெளிவராததற்கு சாலை மறியலும் மற்றும் சினமா நடிகர் நடிகைகளை தலைவர்களாகவும் தங்களது மத சாதி தலைவர்களின் கண்ணசைவில் பலர் தலைகளை கொய்யக்கூடிய கூட்டத்தினராகவும்,அரசியல் என்ற பெயரில் சிலகுடும்பங்கள் முன்னேறவும்,கொள்கைகளை கொள்ளைபுறம் தூக்கிவீசிவிட்டு இருக்கும் அரசியல் கட்சிகளிடம் தலையாட்டி பொம்மைகளாகவும் இருந்து வரும் நிலையில் மூதூர் மதுரையில் ஓர் இளைஞரின் முயற்சியில் மிகப்பெரிய மாற்றத்தினை சந்தித்துள்ளது.

Friday, 19 July 2013

எங்கே நாற்றம்?


சர்க்கஸில் மிருகவதை
சர்க்கஸிக்கு தடைவிதிச்சு
சட்டமேற்றி அமுலாச்சு

சாக்கடையில் மனிச வதை
மனுச கழிவ மனுசனே
அள்ள தடை விதிச்சாச்சு
அமுலுக்கு வருவது மட்டும்
ஏன் நாளாச்சு?

மிருகம் வளர்த்து மனிதம்
கொல்வது தானே இங்கே
இயற்கை இயல்பு.

Sunday, 19 May 2013

அரசு குட்காவிற்கு குட்பை சொன்ன ரகசியம்


நமது தமிழக அரசு மீண்டும் பான்மசாலா ,குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடைவிதித்திருக்கின்றது.இது உண்மையில் மிகவும் வரவேற்கதக்க மற்றும் போற்றுதலுக்குரிய செயல் ஆகும்.மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் 2001 ஆட்சி பொறுப்பில் இருக்கும் போதும் இந்த பான்மசாலா,குட்காவிற்கு எதிராக தடை விதித்தனர். அப்பொழுது பான்மசாலா,குட்காவிற்கு தடைவிதிப்பது மத்திய அரசின்பணி எனக்கூறி தடையினை உடைத்து பான்மசாலா.குட்கா  விற்பனை தமிழகத்தில் படுஜோராக நடைபெற்றது.

Tuesday, 30 April 2013

உழைப்பாளி உதிரம் குடிப்பவர்கள்


மத்திய அரசில்
இருபது ஆண்டுகள் கடந்தாலும்
என்.எல்.சி தொழிலாளி
ஒப்பந்த கூலியே.

மாநில அரசில்
பத்து ஆண்டுகள் கடந்தாலும்
டாஸ்மாக் தொழிலாளியும்
ஒப்பந்த கூலியே.

நீதிமன்றங்களில்
சட்டப்படி 480 நாள்கள்
உழைத்தால் பணிநிரந்தரம்
ஒய்யார கூவுதலே.

ஆட்சி மன்றங்களில்
எதிர்கட்சியாய் இருக்கையிலே
உழைப்பாளிக்கு குரல் கொடுப்பது
ஒய்யார கூவுதலே.

பாரதத்தில்
உழைப்பவனின் போராட்டக்குரல்
என்றும் ஆள்பவர்களின் பார்வையில்
ஒப்பாரி கூவுதலே..

நாளைய பாரதத்தில்
உழைப்பவன் வெகுண்டெழுவான்
ஆள்பவர்களின் இல்லந்தோரும்
ஒப்பாரி கூவுதலே.

---------------*******************-----------------

 

உழைப்பாளரின் உதிரம்
குடிக்கும் அரசுகளையும்
அதிபர்களையும் இந்நாளில்
ஒழிப்பதற்கு சபதமேற்று
உழைப்பாளியை உயர்த்த
உறுதியேற்போம்.


உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

Sunday, 31 March 2013

போன மச்சான்.....நிலை என்ன?நாடு விட்டு நாடு சென்ற உழைப்பாளியின் யதார்தநிலை.

மக்கள் தொகையும், வறுமையும் ,வேலை வாய்ப்பின்மையும் அதிகமாக வாட்டி வதைக்கும் நமது பாரதத்தில் தமிழ் சமுதாயத்தினர் பலர் இன்று அதிகம் கடைபிடிக்கும் தாரகமந்திரமானது "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு".வீட்டிற்கு ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கும் நிலையும் வீட்டினை பூட்டி விட்டு வீட்டில் உள்ள அனைவரும் வெளிநாடு சென்றுள்ள நிலையினையும் பல கடலோர தமிழக கிராமங்களில் காணலாம்.திருமணம் முடித்த கையோடு சவுதி சென்றவன் தான் குழந்தை பள்ளி செல்லும் போது தான் மீண்டும் வருகின்றான்.ஊரிலிருந்து மீண்டு வந்த மகிழ்ச்சியில் குழந்தையை கட்டி அனைத்தால் அப்பாவை கண்டு குழந்தைகள் அரண்டு பயந்த காட்சியை எழுத்தினால்
புரிய வைக்க முடியாது.கண்டால் கண்கள் குளமாகும்.விமான நிலையத்தில் பிரியும் புதுமண தம்பதியர்களின் கண்ணீரினை எழுத்துகளுக்குள் கொண்டுவரமுடியாது. வட்டிக்கு பணம் பெற்று இவ்வாறு வேலைக்கும் செல்லும் தொழிலாளி அங்கு படும் கஷ்டங்கள் சொல்லில் அடங்காது.இருந்தும் அங்கிருந்து வரக்கூடிய பணத்தினை கொண்டு இந்த கண்ணீருக்கெல்லாம் மருந்திட்டுகொள்கின்றனர். இவ்வாறு நாடு விட்டு நாடு சென்று சம்பாதிக்கும் இதற்கும் தற்பொழுது
பிரச்சனை வந்துவிட்டது.

சவுதி அரேபியா ஒர் பார்வை.


இது ஒரு முடியரசு ஆட்சியினை கொண்டது.இதில் 25.721 பில்லியன் மக்களை கொண்டது.60 சதவித மக்களே எழுத்தறிவு பெற்றவர்கள்.அரேபியா தீபகற்பத்தில் 5ல்4 பகுதி சவுதி அரேபியாவில் அடங்கியுள்ளது.உலக பெட்ரோல் உற்பத்தியில் 25% சவுதி அரேபியா விலிருந்தே கிடைக்கின்றது.இந்த பெட்ரோல் உற்பத்திக்கும் விளைபொருட்கள்(பேரீட்சை,பார்லி,கோதுமை) விவசாயத்திற்கும்,கால்நடைகள் வளர்பிற்கும் இஸ்லாமிய புனிதத்தலம் வரும் பயணிகளின்
பராமரிப்பிற்கும் இந்த நாடு இந்தியா உள்ளிட்ட பல நாட்டினர் 2பில்லியன் பேர்களுக்கு மேல் வேலைக்கு அமர்த்தியுள்ளது.ஆனால் அந்த நாட்டினர் சுமார் 30லட்சம் பேர்வரை தற்பொழுது வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

நிதாகத் சட்டம்.

இந்த வேலைவாய்ப்பின்மையை காரணமாக கொண்டு சவுதி அரேபியாவில் 2011 ல் நிதாகத் எனற சட்டம் மூலம் சொந்த நாட்டினருக்கு வேலைவாய்ப்பினையும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஏற்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டது சவுதி அரசு.இந்த நிதாகத் சட்டமானது சவுதியில் 10 பேர்களுக்கு மேல் வேலைவாங்கும் கம்பெனிகளில் 10 சதவீத பணிகளுக்கு சவுதி அரேபியாவினை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கவேண்டும் என்கிறது.அது மட்டுமில்லாது
2011 ல் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவர குறிப்பிட்ட காலக்கெடுவும் கொடுத்துள்ளது.

பழி ஒருபுறம் பாவம் ஒரு புறம்.

உலகம் முழுவதுமே தொழிலாளர் நலன் கருதி எடுக்கும் எந்த தொழிலாளர் சட்டங்களையும் பின்பற்றாத நிலைபோன்றே சவுதி தொழிலதிபர்கள் இந்த சட்டத்தினை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தனர்.சுமார் இரண்டரை லட்சம் சவுதிகம்பெனிகள் இச்சட்டத்தினை நடைமுறை படுத்தாத காரணங்களால் அக்கம்பெனியில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு பணி உரிமம்களை புதுப்பிக்க முடியாது எனவும் பணி உரிமம் முடிந்த அனைவரும் உடன் நாடு திரும்பவேண்டும் எனவும் அவ்வாறு நாடு திரும்பாதவர்கள் கைது செய்து நாடுகடத்தப்படுவார்கள் என கூறி தற்பொழுது பல பகுதிகள் தீடீர் சோதனைகளை செய்து வெளிநாட்டினரை வெளியேற்றி வருகின்றது சவுதி அரசு. சவுதி தொழிலதிபர்களின்
தொழிலாளர் நலன் பேனும் தன்மையில்லாததால் தொழிலாளர்கள் 2பில்லியன் மேற்பட்டவர்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீர்வு தான் என்ன?

சவுதியின் பல புதியதொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்த இந்த தொழிலாளர்கள் எந்தவித தவறும் இலைக்கவில்லை இருந்தும் தொழிலதிபர்களின் தவறுக்கு இவர்கள் பழியாவது எந்தவகையில் நியாயம்.தவறு இழைத்த
தொழிலதிபர்களுக்கு அபராதம் விதித்து அதன் முலம் சவுதியில் வேலையற்ற இளைஞர்களுக்கு உதவிதொகை வழங்கி உதவலாம்.ஏற்றிவிட்ட ஏணிகளாக இருக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை வெளியேற்றும்
நடவடிக்கையினை சிறிது காலநீடிப்பு செய்ய அனைத்து உலக நாடுகளும் வேண்டலாம்.

Thursday, 7 March 2013

மீன் பேசுகிறது....


மீன் பேசுகிறது....

பெண்ணின் கருவிழியை
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

செத்து கருவாடானாலும்
சுட்டு சாப்பிடுகின்றானே
மனிதன்.

கோவைபழம் பேசுகிறது....

பெண்ணின் உதடுகளோடு
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

குருவி கொத்த முன்னால்
என்னை கபளீகரம் செய்கிறானே!
மனிதன்.

கீளி பேசுகிறது....

பெண்ணின் கீச்சுகுரலோடு
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

சுதந்திரமாய் பறந்துவந்த என்
இனத்தை கூண்டோடுஅழிக்கின்றானே!
மனிதன்.

வாழைமரம் பேசுகிறது....

பெண்ணின் தொடைஅழகோடு
ஏன் தான் என்னோடு
ஒப்பிட்டார்களோ?

என் உடம்பில் எதையுமே
விடாமல் எச்சில் செய்கிறானே!
மனிதன்.

 

 .ஷாஜஹான்,99425 22470.
திருமங்கலம்.மதுரை.

 

 

Wednesday, 6 February 2013

குற்றப்பதிவு குதிரைகொம்பே


 

 

குற்றப்பதிவு குதிரைகொம்பே.


தமிழகத்தில் காவல்துறை அலுவலகம் என்பது அந்த அந்தப்பகுதியின் ஆளும்கட்சி அலுவலகமாகவே இந்த இரண்டுகட்சிகளின் ஆட்சியிலும் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றது.எந்த சட்டமீறலுக்கும் வழக்குப்பதிவு என்பது அந்தப்பகுதி மாவட்டச்செயலாளரின் கையில் தான் உள்ளது.காவல்துறை அலுவலகத்தில் புகார் கொடுப்பது பெரும்பாலும் தற்பொழுது தவிர்க்கப்பட்டு ஆளும்கட்சியினர் கட்டப்பஞ்சாயத்து மூலமே தீர்க்கப்பட்டுவருகின்றது. காவல்துறைக்கு   புகார்கொடுக்கவருபவர்களை அந்தப்பகுதி அரசியல்வாதிகளிடம் கட்டப்பஞ்சாயத்திற்கு அனுப்பி பங்கு பணமும் பெற்றுவரும் காவல்துறையினர் ஏராளம். இதில் திருட்டு,வழிப்பறி போன்ற குற்றங்களில் புகாரை பதிவு செய்யக்கூறும்  அரசியல்வாதிகளிடம் தாங்கள் கட்டப்பஞ்சாயத்தில் தலையிடாமல் இருக்கின்ற காரணத்தை கூறி காவல்துறைஎப்படியும் வழக்குப்பதிவை தவிர்க்கின்றனர்.இதில் சென்ற ஆண்டை விட தற்பொழுது குற்றங்கள் குறைந்து இருப்பதாக வேறு செய்திவெளியிட்டு வருகின்றன.உண்மையில் தமிழகத்தில் மட்டும் பல லட்சக்கணக்கான குற்றங்களுக்கு வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் இழுத்தடித்து வெகுஜன மக்களை ஏமாற்றிவருகின்றனர்.கண்டிப்பாக வழக்குப்பதிவு செய்து தான் ஆகவேண்டும் என்று நீதிமன்றம் செல்பவர்களுக்கு மட்டுமே வழக்கு பதிவு நடைபெற்று வருகின்றது. திருட்டுவழக்குகளில் வழக்கினைபதிவு செய்ய பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயப்படுத்தினால் கண்டுப்பிடிக்கமுடியவில்லை என வழக்கினை முடித்துவிடுவோம் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் குற்றவாளியை கண்டுபிடித்து விடுவோம் என கூறியே வழக்குப்பதிவினை காவல்துறையினர் தவிர்த்து வருகின்றனர்.


மத்திய உள்துறை செயலாளர் அறிக்கை தற்போதைய காவல்துறையின் செயல்பாட்டினை அப்படியே படம்பிடித்து காட்டியுள்ளது.


 

சஸ்பென்ட் செய்ய வேண்டும் : மத்திய உள்துறை செயலாளர்!

புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைப் பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில், ஆர்.கே சிங் பேசுகையில், போலீசார் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், நாட்டில் புகார் கொடுப்பதற்கோ அல்லது ஏற்கனவே கொடுத்த புகார் பற்றி விசாரிப்பதற்கோ பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு வரும்போது வேதனையையே அனுபவிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.

அதிலும் பெண்கள், மிகவும் நலிந்த பிரிவினர் ஆகியோர், உள்ளூர் எம் எல் ஏக்களுடன் காவல்துறையை நாடினால் மட்டுமே, சரியான பதில் பெற முடிகிறது. இல்லாவிட்டால் தாங்கள் கொடுத்த புகாரின் நிலை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முடியாமலே போய்விடுகிறது.

இந்த நிலைமை மாறவேண்டும் புகாரைப் பதிவு செய்ய மறுப்பது என்பது சட்டத்தை மீறிய செயல். எனவே புகாரைப் பதிவு செய்ய மறுக்கும் போலீசாரை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும். இதில் தயக்கம் காட்டக் கூடாது. மேலும்,

பெண்கள், நலிந்த பிரிவினர் எந்த வித தயக்கமும் இன்றி உதவிக்கு காவல்துறையை நாடும் அளவிற்கு சூழலை உருவாக்க வேண்டும். மானபங்கம் போன்ற புகார்களை பெண்கள் கூறத் தயக்கப் படும் சூழல் இல்லாதவாறு, காவல் நிலையங்களில் பெண் போலீஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

ஒரு வழக்கின் விசாரணையை முடிக்க கால நிர்ணயம் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மூன்று மாதத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கும் நீதி அநீதிக்கு சமம். வழக்கு தாமதமானால் சாட்சிகள் சாட்சி அளிக்க முன்வரமாட்டார்கள். இதுபோன்ற சிக்கல் இருப்பதால் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று ஆர்.கே சிங் கூறியுள்ளார்

 

காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் எழுத்தளவிலும் பேச்சளவிலும் மட்டுமில்லாமல் சாமானியர்களிடம் காவலர்கள் உண்மையாக செயல்படும் பட்சத்தில் இந்தியாவில் குற்றங்கள் உண்மையில் குறைய வாய்ப்புள்ளது.

.ஷாஜஹான்.
99425 22470.