Friday 19 July 2013

எங்கே நாற்றம்?


சர்க்கஸில் மிருகவதை
சர்க்கஸிக்கு தடைவிதிச்சு
சட்டமேற்றி அமுலாச்சு

சாக்கடையில் மனிச வதை
மனுச கழிவ மனுசனே
அள்ள தடை விதிச்சாச்சு
அமுலுக்கு வருவது மட்டும்
ஏன் நாளாச்சு?

மிருகம் வளர்த்து மனிதம்
கொல்வது தானே இங்கே
இயற்கை இயல்பு.

நாய்செல்லும் சாலையில்
நாம் செல்லக்கூடாது என
நியாயம் புளப்பான்.

சாக்கடையில் இறங்கும் எனக்கு
நடுக்கம் டாஸ்மாக்கால் குறைத்து
நாடி நரம்பினை நசுக்கி
நான் மரணிக்க எந்த சலுகை
வழங்கிடினும் வாரிசு பணி
வழங்கி வாரிசின் ஆயுளும்
வற்றிட செய்வான்.
மாற்று பணிக்கு வாரிசுகள்
மாறாமல் பார்ப்பான்.

நாற்றம் சாக்கடையில்
இல்லையடா எங்களுக்கு
நாட்டின் சட்டங்கள்
அனைவருக்கும் சமம் என
நாகூசாமல் கூறும் அரசுகளே
நாற்றம் பிடித்த அரசுகளே.


வ.ஷாஜஹான்,99425 22470
திருமங்கலம்.

No comments:

Post a Comment