Sunday 19 May 2013

அரசு குட்காவிற்கு குட்பை சொன்ன ரகசியம்


நமது தமிழக அரசு மீண்டும் பான்மசாலா ,குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு தடைவிதித்திருக்கின்றது.இது உண்மையில் மிகவும் வரவேற்கதக்க மற்றும் போற்றுதலுக்குரிய செயல் ஆகும்.மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்கள் 2001 ஆட்சி பொறுப்பில் இருக்கும் போதும் இந்த பான்மசாலா,குட்காவிற்கு எதிராக தடை விதித்தனர். அப்பொழுது பான்மசாலா,குட்காவிற்கு தடைவிதிப்பது மத்திய அரசின்பணி எனக்கூறி தடையினை உடைத்து பான்மசாலா.குட்கா  விற்பனை தமிழகத்தில் படுஜோராக நடைபெற்றது.

இந்த பான்மசாலா,குட்கா வானது வடநாட்டு கூலிதொழிலாளர்கள் மூலமாக தமிழகத்திற்கு வந்து இன்று தமிழகத்தில் 16% மக்கள் பயன்படுத்தி வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது. இந்த பான்மசாலா,குட்கா வினை அடிமட்ட கூலிதொழிலாளர்களே பயன்படுத்தி வருகின்றனர்.இவை மூலம் குறைந்த விலையில் போதையை உணர்வதுடன்,வேலைநேரத்திலும் ஒருவிதமான போதை மயக்கநிலையிலேயே இருப்பதற்கு இது உதவுவதால் பெரும்பாலும் கொத்தனார்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அதே போன்று மேல்தட்டு மக்களில் தமிழக மாநகரங்களில் வடநாட்டினர் அதிகம் குடியிருப்பு பகுதிகளில் பெண்கள் உள்பட அதிகம் பேர் பயன்படுத்தும் நிலைக்கு இன்று தமிழகம் பான் மசாலாவிற்கு அடிமையாகியுள்ளனர்.
இந்த பான்மசாலா, குட்காவினை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு முதலில் பசியின்மையும்,பின்பு உடல் சோர்வும்,உடல் பழகீனமும் ஏற்படுகின்றது. வாய்,உதடு,உள்கண்ணம் போன்ற  பகுதிகளில் புற்றுநோய் வருகின்றது. பேருந்து பயணத்தின் போது பக்கத்தில் உள்ள சகபயணி பான்மசாலா பயன்படுத்தினாலேயே அருகில் உள்ள பயணிக்கும் ஒவ்வாமை மூலம் வாந்தி தலைசுற்றல் ஏற்பட்டுவிடும்.இது ஏனெனில் பான் மசாலாவில் கதிர்வீச்சு பொருட்களின் கலப்படம் உள்ளது.பக்கத்தில் உள்ளவர்களேயே இந்த அளவு பாதிக்கும் என்றால் பயன்படுத்துபவரை எப்படியும் நோயாளியாக்கி விடும்.அது சரி தற்போது ஏன் மீண்டும் பான்மசாலா,குட்கா விற்கு தடைவிதித்தது அரசு என்பதற்குள் வருவோம்.
தற்போது தமிழக அரசே எடுத்து நடத்தும் மதுவிற்பனையங்களான டாஸ்மாக் கடைகளில் நெடுஞ்ச்சாலைகடைகள் அகற்றியதிலும், மின்பற்றாகுறையினால்  தொழில்கள் முடங்கியமையால் தொழிலாளார்களும்  விவசாயிகளும் மிகுந்த வறுமையில் உள்ளதால் விற்பனை பன்மடங்கு குறைந்துள்ளது.இந்த டாஸ்மாக் விற்பனை குறைவினை ஆராயும் பொழுது போதை விரும்பிகள் குறைந்த விலையில் கஞ்சா,பான்,குட்கா போன்றவைகள்  மூலம் போதையினை நுகரதுவங்கியுள்ளது தெரிய வருகின்றது.
தமிழக அரசு பான்மசாலா,குட்காவிற்கு தடைவிதித்தவுடன் மதுவிலக்கு பிரச்சாரகர் எல்லாம் ஏதோ அரசு மக்கள்நலன் கருதி நடவடிக்கை எடுத்துவிட்டதாக எண்ணுகின்றனர். திரு. தமிழருவிமணியன் அவர்களும் அரசின் நடவடிக்கையை  பாராட்டி விட்டு  மதுவிலக்கினையும் அரசு கொண்டுவரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் உண்மையில் டாஸ்மாக் விற்பனை சரிவினை சரிசெய்யும் நோக்குடன் தான் இந்த பான்,குட்கா தடை என்பது ஒருசிலர் மட்டும் அறிந்த நிகழ்வாகும். தமிழகமக்கள் மிகுந்த ஞாபக மறதியும்,மன்னிக்கும் மனம்படைத்தவர்களாக இருப்பதால் தான் இந்த இரண்டு திராவிடகட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன. இன்னும் இவர்கள் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில்
மதுவிலக்கு கொண்டுவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.பின்பு ஏதோ ஒருகாரணம் கூறி மீண்டும் மதுவினை கொண்டுவந்துவிடுவர்.அடுத்த தேர்தல் வரும்பொழுதுதானே மக்களை பற்றி கவலைப்படவேண்டும். சமீபத்திய சட்டமன்றத்தில் மின்துறை மானியத்திற்கு சிலநாட்கள் முன்பிலிருந்து மின் தடையில்லாது இருந்தது பின்பு விட்டதற்கும் பிடித்து தற்பொழுது மின் தடை ஏற்படுவது போன்று இவர்கள் மதுவினை தடை செய்தாலும் பின் தடைவிலக்கி  விட்டதைபிடிப்பர்.ஏனெனில் முந்தைய தற்போதைய ஆட்சியாளர்களே பெரும்பாலும் மதுஆலை முதலாளிகளாவர். உண்மையில் அரசு போதை அரக்கனிடமிருந்து மக்களை மீட்கும் முயற்சியாக படிப்படியாக மதுவிலக்கினை ஏற்படுத்த முயற்சிக்காமல் மதுவிற்பனையை அதிகரிக்கச்செய்யும்  பணியாக பான்மசாலா,குட்காவிற்கு தடைவிதித்திருக்கின்றது.
 

ஏதோ ஒருவகையில் தமிழகமக்கள் அதுவும் குறிப்பாக உழைக்கும் மக்களை புற்றால் பிடித்து உருக்கி கொன்றுவந்த பான் மசாலாவிற்கு தடை என்பது  மகிழ்ச்சியே.பொது இடங்களில் புகைபிடிக்க தடை என்பது ஏட்டளவில் மட்டும் உள்ளதை செயல்படுத்தவும் அரசு முயற்சிக்க வேண்டும். இனி பொது இடங்களில் பான் சாப்பிட்டு சுவர்களையும் பேருந்து ஓரங்களையும் அசுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும் என்ற மனநிம்மதியுடன் இருந்தாலும் தமிழக மக்களை மது அரக்கனிடமிருந்து காப்பாற்ற நாட்டின் சூழ்நிலையை முதலில் மாற்றியமைத்து அனைத்து சமூகங்களும் மதுகுடிப்பவர்களை புறக்கணிப்பதன் மூலமும் மதுவின்  பிரச்சனைகளை அனைத்து மதம்சார்ந்த தலைவர்களும், அரசியல் தலைவர்களும் மக்களுக்கு விளக்கி கூறுவதன் மூலமும் திரைபடங்களும்  மதுவளர்ச்சிக்கு உதவாமல் மது ஒழிப்பு பிரச்சாரம் செய்வதன் மூலம் கொஞ்சமாவது தமிழ் சமூகத்திடமிருந்து மதுவை ஒழிக்கலாம்.வரும் மே 31ம் நாள் உலகபுகையிலைஒழிப்பு தினத்திலிருந்து தமிழகம் புகையிலையற்ற மாநிலமாக சூளுரைப்போம்.

No comments:

Post a Comment