Showing posts with label பறவைகள். Show all posts
Showing posts with label பறவைகள். Show all posts

Friday, 2 December 2016

புள்ளோடு புது பொங்கல்



பண்டிகை என்றாலே பலவகை உணவுகளை ஃபுல் லோடு கட்டுவது நம் பழக்கம். தற்பொழுது பண்டிகைகளில் பண்டங்களுடன் பாட்டில்களையும் (மது) ஃபுல்லாக காலி செய்வது புதிய வழக்கமாக மாறி வருகிறது. ஆனால் இங்கே நாம் கூறும் புள்,  பறவையாகும். பருந்திற்கு தன் தசை கொடுத்து புறாவை காப்பாற்றிய  சிபி சோழனையும், மயிலுக்கு போர்வை தந்து உதவிய பேகனையும்,  பறவைகள் , பயம் கொள்ளக்கூடாது என்பதற்காக தேரின் மணிகளை  கழட்டி விட்டு பயணித்த தலைவர்களையும் பெற்றது நம் தமிழகம். இவ்வகையான பாரம்பரியத்தில் வந்த நம் தமிழ் பறவை ஆர்வலர்கள்  திண்டுக்கல், கோவை என்ற வரிசையில் கடந்த மாதம்  திருநெல்வேலியில் பி.எஸ்.என் கல்லூரியில் தங்களது மூன்றாவது ஆண்டு சந்திப்பை  நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் ஊருக்கே உரிய வகையில் பல  இனிப்பான செய்திகள் கிடைத்தன.

Sunday, 29 May 2016

ரெட்டவால் திருவிளையாடல்



திருவிளையாடல் என்றவுடன் நடிகர் திலகம் சிவாஜி, நாகேஷ்யை மட்டுமே நம்மில் பலரும்  தெரிந்து வைத்துள்ளோம். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்டஅன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த அற்புதங்களே திருவிளையாடல்.  சிவனின் திருவிளையாடல்கள் பல உயிரின பாதுகாப்பாக இருந்தது. சங்கப்பாடல்கள்  பழம் பெரும் மதுரையின் இயற்கையினை அழகுற கூறியுள்ளன. அவைகள் அனைத்தும் இன்று மிகைத்த கற்பனையோ என எண்ணும் வகையில் மாறி வருகின்றது மதுரை. மதுரைக்கு வருபவர்கள் சுபிட்சம் பெற்றவர்களாய் மாறுவர் என்கின்றது திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டது. இப்புராணம் இறைவழிப்பாட்டினை இயற்கை செல்வங்களோடு இணைத்து கொண்டுசெல்கின்றது. சிவனின் திருவிளையாடல்களில் நாரைக்கு முக்தி கொடுத்த  படலம், பரியை நரியாக்கிய படலம், வெள்ளையானை சாபம் தீர்த்தப்படலம், பன்றி குட்டிக்கு முலை கொடுத்தப்படலம் என உயிரினப்பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தமைந்துள்ளது. சங்க இலக்கியங்கள் இயற்கையை பாதுகாப்பது ஆன்மீகத்தின் ஒருபகுதியாக மாற்றி வைத்திருந்தனர்.



ரெட்டவால் குறித்து தினகரன் நாளிதழில் வெளியான எனது கட்டுரை

Friday, 15 April 2016

நீர்க்கோழி போலவே நீந்துவேன்


நீங்கள் உங்கள் முறைப்பெண் வீட்டிற்குச் செல்கின்றீர்கள். உங்களை கண்டவுடன் ஓடிச் செல்லும் பெண் கதவிற்குப் பின் நின்று கால்களில் கோலமிட்டபடி உங்களையே கவனித்தால் உங்களின் மனம் சிறகடித்து பறக்கும் அல்லவா. கோலிவுட் துணை நடிகைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு கனவில் நடனமாட சென்று விடுவீர்கள். நடனமாட தெரியாதவராக  இருந்தால், “மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன?”  இப்பாடலை முணுமுணுக்கவாவது செய்வீர்கள் இல்லையா. ஆம் நண்பர்களே கட்டுரையின் நாயகி இப்படி தான். அவள்  சாம்பல் நிற மேனியாள். ஆனால் அவள் முகமும் நெஞ்சும்  வெந்நிறம். மூக்கில் இருக்கும் சிவப்பு மச்சம் நம்மை சுண்டி இழுக்கும். ஆனால் அவள்  மனித பதர்களை கண்டால் உடனே ஜகா வாங்குவது போல் ஜகா வாங்கி பதர்களை பதைபதைப்புடன் கவனிப்பாள். மிகுந்த வெட்க குணத்தாள். இவள் நடந்தால் பின்பக்கம் சற்று தூக்கியபடி குட்டை வாலுக்குப்பின் செந்நிற இறகுகள் நம்மை கிறங்கடிக்கும்.

Thursday, 10 December 2015

சிலுக்கு மரமே..சிலுக்கு மரமே..சில்லைகள் கொண்டுவா..


பாசமாக பேசுகையிலும், படுக்கை அறை கொஞ்சலிலும், பாராட்டுவதற்கும் பயன்படுவது பறவைகள். நமக்கு பிடித்தவர்களை வர்ணிக்க வார்த்தையில்லை என்போம். பின்பு என் கொஞ்சும் புறாவே, செல்லக் கிளியே, மைனாவே , என் மயிலே, என் சிட்டே என பலவாறு வர்ணிப்போம். பாராட்டு வார்த்தைகளுக்கு மட்டுமா பறவைகள். இல்லை இல்லை. வசவு வார்த்தைகளிலும் வண்ண பறவைகள் உள்ளன. ஆக்கம் கெட்ட கூவை, திருட்டு காக்கா வேல காட்டாத. கள்ளப்பருந்து சேட்டை செய்யாதே,வாத்து மடையா என்போம். பலவகைகளில் மனிதனின் வாழ்வில் பறவைகள் ஒன்று கலந்து விட்டன. சரி பில்டப் போதும்  கட்டுரைக்கு வாப்பா என நீங்கள் சொல்வது புரிகிறது நண்பர்களே.
சில்லாட்டை
சில்லாட்டை இன்று  இது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் தென்னை பனை மரங்கள் இன்று காட்சி பொருளாகிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றும் காண கிடைக்கா  பொருள் தென்னை, பனை மரங்கள். தென்னை மற்றும் பனையின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுபவை என எங்காவது படித்திருப்பீர்கள். படிக்காது இருந்தால் இன்று அறிந்து கொள்ளுங்கள். பனை மற்றும் தென்னைகள் இருக்கும் காலமெல்லாம் பயன் கொடுக்கும். ஆம் மொட்டை பனை தென்னைகள் கூட பறவைகள், பாம்புகள் வாழ்விடமாக இருக்கும். 

Thursday, 20 November 2014

சோழவந்தான் பறவை பார்வை


மதுரையின் சோலை சோழவந்தான். சிறு வயதில் மேலக்கால், திருவேடகம் தர்ஹாக்களில்  இரவெல்லாம் தங்கி சந்தனக்கூடு பார்த்து மகிழ்வேன். காலையில் வைகை ஆற்றில் குளிப்பதற்காக சோழவந்தான் வந்திருக்கின்றேன். பார்க்க காவேரி ஆற்றுப்படுகையை போன்றே பச்சைபசேலென்று இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் சென்ற பொழுது மிகுந்த வறட்சியாக இருந்தது. மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். மீண்டும் இந்த மண் செழிக்க வழியிருக்கின்றதா என எண்ணினேன். 

சென்ற 9.11.2014 அன்று இறகுகள் அமைப்பின் சார்பாக பறவை பார்வையிட மீண்டும் சோழவந்தான் புறப்பட்டேன். செல்லும் வழியெல்லாம் மெல்ல மெல்ல வறட்சிகள் நீங்கி வருவதினை கண்டேன். கண்மாய்களில் தண்ணீர் கொஞ்சமெனும் இருந்தது ஆறுதல். பறவைகள், விளைநிலங்கள், மனிதர்களை பார்வையிடுகையில் அனைவரும் மகிழ்வாய் எனக்கு காட்டியது. இந்தப்பதிவினை நீங்கள் சோழவந்தானை பறவை பார்வை பார்ப்பதாக எண்ணினாலும் நலம். தொடர்ந்து சோழவந்தானில் நான் பார்த்த பறவைகளையும் விவசாய விளைநிலத்தினையும் வாங்க பார்க்கலாம்.

Saturday, 15 November 2014

இறகுகள் முளைத்திட்ட பொழுதினில் 2


நாணல் நண்பர்களும், இறகுகள் அமைப்பினரும் இணைந்து நடத்திய மதுரை சூழலியல் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர் பார்வை. இறகுகள் அமைப்பின் ரவிந்திரன் அவர்கள் சூழலியல் சார்ந்த பறவையியல் களஆய்வு குறித்து உரையாற்றினார். அவைகள் பின்வருமாறு. காலநிலை மாற்றத்திற்கு தகுந்தவாறு பறவைகள் தங்கள்  தங்குமிடங்களை மாற்றிக் கொள்கின்றன. இந்த நிகழ்வினை வலசை போதல் என்பர். ஒருபகுதியில் பறவைகள் வரவுகளின் எண்ணிக்கையையும் தன்மையும் கொண்டு வரவிருக்கும் மழை அளவினை அறிந்து கொள்ளலாம். சிட்டுக்குருவியின் அழிவில் செல்போன் டவர்கள் ஒரு காரணமாக அமைந்தாலும் நம்முடைய வாழ்வியல் நடைமுறையும் ஒரு பெரும் காரணமாகும். சென்ற காலங்களில் கோதுமை,அரிசி  மாவு தயாரிக்க வீட்டில் பெண்கள் கோதுமையினை காயவைத்து அரைக்க கொடுத்து வாங்குவர். பலசரக்கு கடையினர் பலதானிய வகைகளை பிரித்து காய வைத்து முன்பு வழங்கினர். ஆனால் இன்று ஷாப்பிங் மால்கள் மூலம் பாக்கெட் பொருட்களாக வாங்கும் பழக்கத்திற்கு வந்ததால் குருவிகளுக்கு சிதறும் தானியங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.