Thursday 6 November 2014

ராஜராஜசோழன் சதயவிழா



தஞ்சையின்  சிறப்புகளான  “தமிழகத்தின் நெற்களஞ்சியம், பெரிய கோவில் இவ்விரண்டையும்  நம்மில் அறியாதவர்கள் இலர்”. பெரிய கோவிலின் சிறப்புகளை பலமுறை கேட்டு இருந்தாலும் நேரில் பார்க்கும் தருவாய். இந்தஆண்டே கிடைத்தது. நமது தொல்லியல்  அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மாமன்னன் இராசராசன் விருது  பெறுகிறார் என்றவுடன் திருமங்கலம் பசுமைநடை அன்பர்கள் கண்டிப்பாக அந்த தருணத்தில் நாம் தஞ்சையில் இருந்தாக வேண்டும் என தீர்மானித்தோம்.


திட்டமிட்டப்படி ஞாயிறு காலை திருமங்கலம்  ரயில்நிலையத்திலிருந்து நான்,இளஞ்செழியன் கதிர், பாடுவாசி ரகுநாத், திருமங்கலம் முத்துகிருஷ்ணன் அண்ணண் ஆகியோர் கிளம்பினோம். மதுரை ரயில்நிலையத்தில் பசுமைநடை பயணச்சிங்கம் மதுமலரன், வேலையில் "தேனீ" சிவ சதீஷ் ஆகியோர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர்.




எந்த ஒரு பகுதிக்கும் பேருந்தில் பயணிக்கும் பொழுது நகர சூழ்நிலையே தெரிய வரும். ரயிலில் பயணித்தால் நிலங்களின் நிலைகளும், நகரமயமாகும் புதுவீடுகள் கட்டும் சூழலும் தெரியவரும். இந்த முறை பயணத்தில் எங்கு நோக்கினும் நீர்நிலைகளும், பச்ச பசேர் என்ற நிலங்களும் எனது அன்பு காதலிகளான பறவைகள் பலவிதங்களிலும் காணக்கிடைத்தன.
நாங்கள் இயற்கையினை ரசித்தப்படியும் எங்களுக்குள் கலந்துரையாடியபடியும் தஞ்சையினை 3மணியளவில் சென்றடைந்தோம். நிகழ்ச்சி இரவு 8மணி என்பதால் முதலில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சென்று பார்ப்பதென முடிவு செய்து சென்றோம். அது பற்றிய பதிவு தனியாக கூடிய விரைவில்.

தஞ்சையில் ராஜராஜசோழன் சதயவிழா ஆண்டுதோரும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த முறை 1029 ஆண்டு சதயவிழா இரண்டுநாட்கள் நவம்பர் 1 மற்றும் 2ந்தேதிகளில் பெரியகோவில் வளாகத்தில் நடைபெற்றது. நாங்கள் சென்ற இரண்டாம்  நாள் நிகழ்வு  காலை மங்கள இசையுடன் துவங்கி திருமறையில் உள்ள ஐம்பத்திற்கும் அதிகமான இசைக்கருவிகள் இசையுடன் ஓதுவார்கள் திருமறை வாசித்தப்படி தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் இருந்து பேரணி புறப்பட்டு தஞ்சையை வலம் வந்திருந்தது. தஞ்சை பிரகதீஸ்வரருக்கும்,பெரிய நாயகி அம்மனுக்கும் 48 வகை அபிஷேகம் காலையில் செய்ததாகவும் அறிந்தோம்.
நாங்கள் அனைவரும் மாலை 6மணியளவில் பெரியகோவிலை அடைந்தோம். பெரிய கோவிலினை சுற்றிப்பார்த்து பிரமித்தோம். தஞ்சையே விழாக்கோலம் கொண்டிருந்தது. பெரிய கோவிலினை சுற்றி அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மழைதூறல்களுக்கிடையே பட்டிமன்றம் படுசுவாரசியமாக ராஜராஜனின் பெருமைகளையும் அதே நேரத்தில் சோழர்கள்  பற்றிய விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.




பின்பு தஞ்சையின் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினரும், மேயரும் ராஜராஜசோழனின் சதயவிழாப்பற்றி உரைநிகழ்த்தினர். 
மாமன்னன் இராசராசன் விருது  நமது தொல்லியல்  அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மற்றும் மகாநந்தி ஆன்மிக சபை தலைவர் பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.பின்பு தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. இனிதே நிகழ்வினை கண்டு விருது பெற்ற சாந்தலிங்கம் அய்யாவிற்கு மரியாதை செலுத்தி ஊர் திரும்பினோம்., இப்பயணத்தில் பிரம்மாண்டமாக இக்கோயிலை உருவாக்கிய உழைப்பாளர்களை நினைத்து பெருமை அடைந்ததுடன், மாலை விழா துவக்கத்தில் சிலசாதிகட்சியினரின் வாகன அணிவகுப்பினை பார்த்த பொழுது இவ்விழாவானது சாதிய பூச்சுக்குள் கலந்துவிடுமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத நமது பசுமைநடை நண்பர்களுக்காக பதிவினை சமர்ப்பிக்கின்றேன்.                        
                                         உங்கள் வஹாப் ஷாஜஹான்.
                                                   திருமங்கலம்.
                                    

  

8 comments:

  1. Replies
    1. நன்றி தம்பி இளஞ்செழியன்

      Delete
  2. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யாவின் ஆசிகளை என்றும் எதிர்பார்க்கின்றேன்.நன்றி அய்யா

      Delete
  3. தஞ்சையில் திரண்ட திருமங்கலம் பசுமைநடை நண்பர்களையும், மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா விருது பெற்றது மகிழ்வளிக்கிறது. அன்றைய நிகழ்வை அருமையாக படம் பிடித்தமைக்கு வாழ்த்துகள். தொடரட்டும் பதிவுப் பயணம்.

    அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்

    ReplyDelete
  4. நன்றி தம்பி சித்திரவீதிக்காரன்.

    ReplyDelete
  5. படங்களும் பதிவும் நேரில் கண்டதுபோல் சிறப்பாய் இருக்கிறது

    ReplyDelete
  6. நன்றி கண்ணாதாசன் அய்யா அவர்களுக்கு

    ReplyDelete