Saturday 9 August 2014

காற்றடி கால கவனம்.

            
தமிழகத்தின் பருவநிலை மாற்றங்களில் மழை பொய்த்து கோடைகாலம் மட்டுமின்றி காற்றடி காலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப காற்றினையே அதிகம் நுகரக்கூடியவர்களாக பெரும்பகுதிமக்கள் இருந்துவருகின்றோம். மாறிவரும் பருவசூழ்நிலைகளுக்கு ஒப்ப காற்றடிகாலங்களில் பொதுமக்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள் அனைவரும் அறிந்த விசயங்களாக இருந்தாலும் நினைவூட்டுவது தானே இணையத்தின் கடமை. அந்தவகையில் காற்றடி காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை கீழ்காணலாம்.
1.   சாலையோரம் மற்றும் வீடுகளில் உள்ள மரங்களின் ஒருசில கிளைகள்  வறட்சியின் காரணமாக காய்ந்த நிலையில் விபத்தினை ஏற்படுத்த தயார் நிலையில் இருந்துவரும் அம்மரங்களின் காய்ந்த கிளைகளை அகற்றவேண்டும்.

2.  
மாடிகளில் வேயப்பட்ட கீற்று கூரைகள்,ஆஸ்பட்டாஸ்,தகர சீட்டுகள்,விளம்பர போர்டுகள் அடிக்கும் காற்றின் வேகத்திற்கு பிய்த்து கொண்டு சென்று பெரும் விபத்துக்களை ஏற்படுத்தலாம். எனவே காற்றடிகாலத்தில் மேற்கண்டவைகளை மராமத்து பார்த்து மீண்டும் பொருத்துதல் வேண்டும்.
3.   காற்றடிகாலத்தில் தூசுகளின் பாதிப்பால் கண் நோய்கள் ஏற்பட அதிகவாய்ப்புள்ளதால் வீட்டை விட்டு வெளியேறும் பொழுது தகுந்த கண்கண்ணாடிகள் அணிவது அவசியம்.
4

.   இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் பயன்படுத்துவதோடு கண்ணாடி முககாப்பானையும் கண்டிப்பாக பயன்படுத்துதல் அவசியம். காற்றின் வேகத்திற்கு தகுந்தாற்போல்  வண்டியின் வேகத்தினை சரிசெய்து ஓட்டுதல் நலம்.
5.   கடைகளின் கழிவு பொருட்களையும் திருஷ்டி சொக்கடான்களையும் திறந்தவெளிகளில் எரிக்கும் பொழுது நெருப்பு காற்றில் பறந்து தீ விபத்து ஏற்படும்.எனவே திறந்தவெளிகளில் எரியூட்டுவதினை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

6.   வீடுகளில் துணிகளை உலர்த்தும் பொழுது கிளிப்புகளை அதிகப்படுத்தி காற்றினில்  பறந்து செல்வதினை தடுத்திடல் வேண்டும்.
7.   வீட்டின் கதவு,ஜன்னல்களை திறந்துவைத்து இருக்கும் பொழுது காற்றினால் மூடிமூடி திறப்பதினால் கதவு,ஜன்னல் பலவீனம் அடைவதினை தவிர்க்க அதற்குரிய கிளிப்களை சரியாக பொருத்த வேண்டும்.
8.   வீட்டுத் தோட்டங்களில் உதிர்ந்து கிடக்கும் இலைகளை எரிக்காமல் குழி தோண்டி புதைப்பதன் மூலம் உரமாக்கலாம்.
9
.   வீட்டினில் டைல்ஸ்,மார்பிள்,கிரானைட் தளங்களில் தூசுபடிந்தால் கால் பாதங்கள் வழுக்கி விழுந்து காயங்கள் ஏற்படும். எனவே காலை மற்றும் மாலை இருவேலை வீட்டினை சுத்தம் செய்தல் வேண்டும்.
10. காற்றடி காலங்களில் மொட்டை மாடிகளில் குப்பைகள் சேர்ந்து மழைநீர் சேமிப்பு மற்றும் தண்ணீர் வெளியேற்றும் குழாய்களை அடைத்துவிடுவதால் மழைகாலத்தில் மாடி தளத்தில் தண்ணீர் தேங்கி கட்டிடத்தினை பலவீனப்படுத்தும்.எனவே அடிக்கடி மொட்டமாடி தளத்தினை சுத்தம் செய்தல் வேண்டும்.
                                  வஹாப் ஷாஜஹான்,
                                     திருமங்கலம்.         



No comments:

Post a Comment