Tuesday 1 July 2014

உழைப்பாளியை பூமி உள்வாங்குவது ஏன்?


ஆந்திரா, கர்நாடகா
இலங்கை  இறக்குமதி
நடிகர்களை ஆட்சியாளராயும்,
குபேரர்களாகவும் மாற்றிய
கடவுளர்களே என் கட்டிட
தொழிலாளிகளை மட்டும்
உள்வாங்குவது ஏனோ?

வானம் தொட்டுவிட முதலாளியும்
கட்டிடங்களும் முயற்சிகையில்
முறுக்குகம்பி,சிமிட்டிகளுக்கிடையே 
சித்தாலை மட்டும்
சிக்கவைப்பது ஏனோ?
பொறியாளனை மட்டும்
பொறிவைத்து பிடிப்பது ஏனோ?

உழைப்பாளி அரிதாகிவிட்ட
தமிழ்மண்ணில் இனியாவது
உழைப்பாளி பிறக்க விதையாக
என் உழைப்பாளிகளை
உள்வாங்கி இருப்பானோ?





உழைப்பாளியே உஷார்.

கடவுளும் மோட்சம் தருவதாக
மோசம் செய்திடுவான்
ஏமாறி பழகிவிட்டோமே நாம்
மோட்சத்தின் கட்டிடமும்
உங்களை கொண்டுதான்
கட்டவேண்டும் அதற்காக தான்
உள்வாங்கினேன் என
கடவுளும் உன்னை ஏமாற்றி
வேலைவாங்க போவது உறுதி.
                               வஹாப் ஷாஜஹான்.
                                      திருமங்கலம்.





2 comments:

  1. உழைப்பாளிகளின் இன்றைய உண்மை நிலையை உணர்த்தும் மிகச் சிறப்பான வரிகள். இனியாவது ஒரு மாற்றம் பிறக்க வேண்டும்.

    ReplyDelete
  2. கவிதை மிகவும் அருமை. தலை வணங்கி வாழ்த்துகிறேன்.
    நாள் முழுக்க உழைத்து, நாளின் முடிவில், மரணத்தை ஊதியமாகப் பெற்றுச் சென்ற முகம் தெரியாத அந்த உழைப்பாள தோழர்களின் இயலாமையை, வேதனையை நிஜமான குமுறலுடன் பதிவு செய்திருக்கிறீர்கள். சமூக அவலங்களை சாடும் எழுத்துக்களை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறேன்.
    நன்றி.
    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    ReplyDelete