Sunday, 12 January 2014

கதிர் பொங்கல்மலர்

பசுமைநடை பொங்கல்விழா
நேற்றைய ஞாயிறு (12.01.14) மிகுந்த உற்சாகம் மிகுந்த நாளாக அமைந்தது. என்னவெனில் நண்பர்களே பசுமைநடை பொங்கல்விழா இனிதே நடைபெற்றது.எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களின் வீட்டில் மாலை 4 மணிக்கு துவங்கிய விழா இரவு 8.30 மணிவரை மிகவும் பயனுள்ள பொழுதாக அமைந்தது.இதில் வயிற்றிக்கும் செவிக்கும் வழங்கப்பட்ட திகட்டாத இனிப்பானது இப்பொழுது நினைத்தாலும் தித்திக்கின்றது.

கதிர் பொங்கல்மலர்
முதலில் அனைவரும் இணைந்து சர்க்கரை பொங்கல் தயார் செய்து சாப்பிட்ட பிறகு கதிர் பொங்கல்மலர் (இரண்டாம் ஆண்டு) வெளியிடப்பட்டது. எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களின் வீட்டின் “நிலா முற்றம் பெயருக்கு ஏற்றார்போல் மொட்டை மாடியில் மலர்வெளியிடு நடைபெற்றது. சர்க்கரைப் பொங்கல்களுக்கு போட்டியாக எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களின் சிறப்புரையும்,மலர் வெளியிட்ட எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மற்றும் மலரினை பெற்ற தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்,பெ.சின்னச்சாமி ஆசிரியர்,கு.குருசாமி துணை ஆட்சியர்(ஓய்வு) அவர்களும் தலைமையேற்ற மூ.பா.முத்துக்கிருஷ்ணனும் நன்றியுரையாற்றிய தி.கண்ணன் ஆசிரியர் அவர்களும் சிறப்பாக உரைநிகழ்த்தினர். இரவு வீடுதிரும்பிய பின்பும் கையில் நெய்மணமும் மனதில் தமிழர்தன் விருந்தோம்பல் மற்றும் பாரம்பரிய பெருமையும் நிலைத்து மகிழ்ச்சி பொங்கியது.நூல் குறித்து
வீடு சென்றவுடன் கதிர்புத்தகத்தில் எனது கவிதையும் எனது வலைப்பூவின் வாழ்த்தினையும் திரும்ப திரும்ப பார்த்து மகிழ்ந்த பின்பு புத்தகத்தில் தம்பி இளஞ்செழியன் அப்படி என்னதான் தொகுத்து மற்றும் எழுதியுள்ளான் என முதல்பக்கத்தில் துவங்கிய நான் புத்தகத்தின் கடைசிபக்கம் வரை படித்து முடித்தே கீழே வைத்தேன்.இது புத்தகவாசிப்பில் நான் செய்த ஒரு சாதனையாகும்.ஏனெனில் அடுத்தவார புத்தகம்வந்த பின்பும் சென்ற வார புத்தகம் முடிக்காமல் வைப்பதே எனதுவழக்கம். கதிர் பொங்கல் மலரில் துவக்கம் முதல் இறுதி வரை அவரது படைப்பும் மற்றவர்களிடமிருந்து பெறப்பட்டபடைப்புகளும் தமிழகத்தின் ஆகச்சிறந்த கட்டுரை, கதை, கவிதை கலங்களாகும். குறிப்பாக மு.வரதராசனார் எழுதிய “குறட்டைஒலிபடித்து மெய்மறந்து கண்ணீர்விட்ட நிலையில் வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழைந்த எனது மனைவி எனது அழுகையை பார்த்ததும் என்னங்க? என்ன இப்ப அழுக்கின்றீர்கள் எனகேட்க கதைபடித்துதான் எனக்கூற நான் பயந்தே போயிட்டேனு சொல்லி தலையில் தட்டி கொண்டாள். “மறைந்துவரும் விளையாட்டுகளும் மறக்காத நினைவுகளும் “என்ற தலைப்பில் சித்திரைவீதிக்காரன் எழுத்து நம்மை சிறு வயது ஞாபகங்களை தூண்டும்.கவிதைவரிசையில் முகிழ் என்பவர்  துவங்கி ரகுநாத் தினேஷ்,உதயா, சோலை. அன்பழகன் என அனைத்தும் தேர்ந்த மற்றும் நேர்த்தியானவையாகும்.புத்தகவாசிப்பு குறைந்து வரும் இந்நாளில் இது போன்று புத்தகங்கள் தொடர்ந்து வெளிவரும்பட்சத்தில் வாசிப்புகள் கண்டிப்பாக உயரும்.இந்த புத்தகத்தில் நானும் ஒருவகையில் பங்காற்றியுள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
நன்றியுடன்  உங்கள் உழைப்பாளி.

புகைப்படம்:தம்பி ரகுநாத்.

3 comments:

  1. கதிர் பொங்கல் மலர் மிகச் சிறப்பாக வந்துள்ளது. முகப்பு அட்டையிலிருந்து பின்னட்டை வரை நம்மை ஈர்க்கும் இந்நூலில் என்னுடைய படைப்புகளையும் வெளியிட்ட நண்பர் இளஞ்செழியனுக்கு நன்றி.

    ReplyDelete
  2. புத்தகப் படைப்புகளில் என்றென்றும் நாமும், நமது முத்தான நண்பர்களோடு இணைந்து பயணிப்போம். இந்த மலரின் வெற்றி தனி மனிதனுடையது (இளஞ்செழியன்)அல்ல அல்ல. இது கதிர் நண்பர்களின், நண்பர்குழுவின் வெற்றி. இணைந்து கொண்டாடுவோம்.

    ReplyDelete
  3. அருமையான படைப்புகள், கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் சமுதாய பிரச்சனைகளை பேசியது. தொடரட்டும் பணி

    ReplyDelete