Sunday, 13 January 2013

இளமைப் பொங்கல்.                                                                                                                

இளமைப் பொங்கல்.

பொங்கல் இப்பண்டிகை தமிழர்கள் தங்களது உழவின் பலனையும் ஆண்டின் பிறப்பினையும் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்ததன் நினைவாக இன்று எஞ்சியுள்ளது.ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்கள் தலைவர்களின்
பிறந்தநாளையோ அல்லது வரலாற்றில் நடைபெற்ற சம்பவங்களை நினைவுகூறுவதர்க்கு பண்டிகைகளை கொண்டாடி வருகையில் தமிழ்சமுதாயம் மட்டுமே தங்களது உழைப்பினால் உண்டான உழவின் பலனை கொண்டாடுவதால் உண்மையான மகிழ்ச்சி பொங்கள் பண்டிகையில் பெற்றுவந்தனர்.தமிழ் சமூகத்தில் சாதி மதங்கள் கடந்து அனைவரும் கொண்டாடும் பண்டிகை பொங்கல்.கிராம பி ண்ணணி கொண்டு விவசாயத்தினை தொழிலாக கொண்ட இஸ்லாமியர்கள் "தை பாத்திஹா" என்ற பெயரில் இன்றும் இஸ்லாமிய மதகுருமார்களை கொண்டு பொங்கல் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் களுக்கு முந்தின தினம் போகிப் பண்டிகை இதில் பழையன கழிதலும் புதியவைகளை ஏற்பதற்குமான  நிகழ்வாகும்.இந்த முறை போகியில் நமது பழைய மூடப்பழக்கவழக்கங்களை விட்டொழித்து புதியமனிதர்களாக உருவெடுக்க முடிவெடுப்போம்.குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் எரித்து சுற்றுபுறம் மாசுபடுத்தாமல் நம்மிடமுள்ள கெட்டபழக்கங்களை எரித்துஒழிப்போம்.இந்நாளில் நம்மிடம் தேவையின்றி இருக்கும் பொருட்களை ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து உதவுவோம்.பண்டிகைக்கு முந்தைய தினம்  வீட்டினை சுத்தம் செய்யவேண்டும் என்று உலகிற்கு  அறிவித்த தமிழ்சமுதாயத்தை சுற்றுப்புறத்தினை மாசுபடுத்தாதீர் என மற்றவர் கூற அனுமதியோம்.தமிழ்சமுதாயம் உழவினை தனது முக்கிய தொழிலாக கொண்டதால் இயற்கையின் ஆர்வலர்களாக இருந்துவந்துள்ளனர்

உலகின் முதல் இயற்கையான சூரியனை வணங்கும் தினமாக பொங்களை அமைத்துள்ளனர்.அதன் பொருட்டு காலை இனிப்பு பொங்களை தங்களது       வீட்டிற்கு வெளியே சமைத்தனர்.தங்களது  வீட்டில் சமைக்கும் வரை அது தங்களுக்கு மட்டுமாக இருந்தாலும் வெளியே சமைத்து மற்றவர்களுக்கும் விருத்தளித்து தானத்தில் சிறந்த சமுதாயமென நிருபித்து வந்தனர்.இந்த பொங்களிடும் பொழுது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருங்கே அமைந்து பெண்களுக்கு உதவியாக ஒற்றுமைபொங்கல் படைத்தனர்.பொங்கல் மறுநாள் தங்களது உழவிற்கு உதவும் கால்நடைகளுக்கு சிறப்பு செய்யும் விதமாக மாட்டுபொங்கல் கொண்டாடிவந்தனர்.தங்களது வளர்ப்பு பிராணிகளை சிறப்பித்த முதல் சமுதாயம்  தமிழ்சமுதாயமாக இருந்தது.இன்று தங்களின் குடும்பத்தினரையும் வாரிசுகளையும் சரியான முறையில் வளர்க்க முடியாத சமுதாயமாகி வருகின்றது.இந்நாளில் மற்றும் ஒருசிறப்பாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப் பட்டு வருகின்றது.உலகில் மனிதன் தோற்றுவித்ததில் எது சிறந்தது என வினா எழுப்பினால் பலர் விவசாயம் எனவும் மற்றும் சிலர் தீ கண்டுபிடிப்பு எனவும்,இரும்பு,பாசன முறை என பல்வேறு விசயங்களை கூறினாலும் நல்லோராக நாம் வாழ உணர்த்தும் பெரியோர்களின் சொற்களே என்று நான்கூறுவேன்.அந்தவகையில் உலகமக்கள் தங்களது வாழ்வில் உயர கடைபிடிக்க வேண்டிய முறைகளை கொண்ட திருக்குறளை படைத்த திருவள்ளுவரை போற்றக்கூடிய நாளை இளைஞர்கள்  கவியரங்கங்கள் திருக்குறள் விளக்ககூட்டங்கள் நடத்தி ஒழுக்கமான வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும்.தமிழர்கள் தங்களது வீரத்தினை நிலைநாட்டும் வகையில் வீரவிளையாட்டாக மஞ்சுவிரட்டு,சடுகுடு ,மாட்டுவண்டி போட்டி
போன்ற விளையாட்டுகளை இந்நாளில் விளையாடி வந்தனர். இந்த வீரவிளையாட்டினை கால்நடைகளை துன்புறுத்தாது நடைபெற வழிவகுக்கவேண்டும்.அடுத்தநாள் உழவர்தினமாக கொண்டாட படுகின்றது.இந்த விடுமுறை நாட்களில் புதிய திரைப்படங்கள் திரைக்கு வருவதை ஆவலாக பார்த்து மகிழநினைக்கும் இளைஞர் சமுதாயம் அதை தவிர்த்து கிராமங்களுக்கு பயணித்து உழவர்களை சந்தித்து உழவிற்கு மரியாதை செய்திடவேண்டும்

 பண்டைய பொங்கலில் போகியில் துவங்கி உழவிற்கு நன்றி செலுத்தி முடியும் பொங்கலில் இளைஞர்களின் பங்கே அதிகம். இன்னறய இளைஞர்கள் திரைபட நடிகர்களின் ரசிகராகவோ,மத சாதி புரோகிதர்களின் பிடியில் மத சாதியவாதியாகவோ அல்லது,அரசியல்வாதிகளிடமோ தங்களது இளமையினை தொழைத்து விடுவதோடு புதிதாக இளமையின் தன்மையான வீரம்,வீவேகம்,செயலாற்றும் திறனை டாஸ்மாக்கில்   மூழ்கடித்து வருகின்றன.விவேகானந்தரின் பொன்மொழிகளில் முக்கியமானது என்னிடம் நூறு இளைஞர்களை கொடுங்கள் நான் இந்தியாவினையே மாற்றிகாட்டுகிறேன். ஆம் உலகத்தினை உன்னதமாக்கும் சக்தி நம் தமிழ்இளைஞர்கள் கையில் தான் உள்ளது.தமிழகத்தில் இயற்கை வளங்களை காப்பது,அரசியலில் ரெளடிகளை வெளியேற்ற செய்யவேண்டியது , மற்ற அனைத்து பண்டிகையையும் விட தமிழர்களின் ஆதி பண்டிகையான பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுக்கசெய்ய அரசை தூண்டுதல்,  பக்கத்து நாட்டில் நமது சொந்தங்கள் அநாதைகளாக இருந்து வருபவர்களை சுதந்திரகாற்றை சுவாசிக்க செய்யும் மிகச்சீரிய பணிகள் இன்றைய இளைஞர்கள் கைவசம் உள்ளது.பொங்கலை  மீண்டும் உயிரோட்டமாக உருவாக்கும் பொறுப்பு இன்றைய இளைஞர்களிடமே உள்ளது என்பதனை உணர இக்கட்டுரை ஒரு சிறு பொறியாகும் என எண்ணி படைக்கிறேன் என் எழுத்து பொங்கலை.

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை..No comments:

Post a Comment