Thursday, 27 July 2017

மண்டையோட்டுப் பூச்சி-2


சென்ற கட்டுரையில் அந்துப்பூச்சிகள் பற்றி நிறையவே தெரிந்து கொண்டோம். இப்போ மண்டையோட்டு அந்துப்பூச்சி பற்றி பார்ப்போமா? வண்ணத்துப்பூச்சிகளில் (PLAIN TIGER) புலி உருவம் இருப்பது அனைவரும் கண்டிருப்போம். மேலும் அரிய வகையாக நாய் உருவம், உலக வரைபடம், சிலுவை, மனித கண்கள் போன்ற உருவங்கள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம்.
அதுபோல அந்துப்பூச்சியில் மண்டையோடு, ஆந்தை போன்ற உருவங்கள் கொண்டவை உள்ளன. ஆனால் இவைகளை பார்ப்பது மிகுந்த அபூர்வம். மண்டையோட்டுப் பூச்சியை ஆங்கிலத்தில் லெப்பிடோப்டெரா (lepidoptera)  வகை பூச்சி என அழைப்பர். மண்டையோட்டுப் பூச்சி  பார்க்க பட்டுப் பூச்சியை போன்றே இருக்கும்.

பறவைகள் போல் மண்டையோட்டு அந்துப்பூச்சியும் வலசை செல்கின்றன. மத்தியகிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, லண்டன், சீனா, ஜப்பான், பாகிஸ்தான் ,பங்களாதேஷ்,வியாட்நாம், மலேசியா , தாய்லாந்து போன்ற பகுதிகளில் அபூர்வமாக தென்படுகின்றன.


பலவகை அந்துப்பூச்சி இருப்பினும் மண்டையோட்டு அந்துப்பூச்சி மூன்று வகையே உள்ளன. அவை முறையே ஆங்கிலத்தில் Acherontia     atropos, Acherontia styx and Acherontia lachesis ஆகும். தில் ஆசியாவில் இரண்டு வகையும் ஐரோப்பாவில் ஒரு வகையும் உள்ளன.  நமது இந்தியாவில் இப்பூச்சியை அபுஜ்மார் காடுகள், கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒரு சிலர்கள் மட்டுமே கண்டுமகிழ்ந்துள்ளனர்
இப்பூச்சி வகையில் ATROPOS வகைப்பூச்சி மட்டும் தேன் கூடுகளை தாக்குகின்றன. இதனால் மண்டையோட்டுப்பூச்சியைதேனீ கொள்ளைக்காரன்என்றும் அழைக்கப்படுகின்றது. மேலும் தேனீக்களின் கூடுகளில் இரவில் பெண் மண்டையோட்டுப்பூச்சி முட்டையிட்டு விட்டு சென்றுவிடும். ம்முட்டைகள் புழுப்பருவத்தில் தேன் கூடுகளில் உள்ள லார்வாக்களை உண்டு துவம்சம் செய்யும்.


நான் கண்ட மதுரை பெருமாள் மலைப்பகுதியில் மலைத் தேனீகள் அதிகம். அந்த தேன் கூடுகளில் தங்கள் இனத்தை பெருக்கும் நடவடிக்கையாக வந்த மண்டையோட்டு அந்துப்பூச்சியையே நான் கண்டதுடன் நமது வாசகர்களும் கண்டு மகிழ கட்டுரையாக்கியுள்ளேன்
மேலும் இப்பூச்சியை பற்றி தகவல் சேகரித்த பொழுது மதுரை அரிட்டாப்பட்டி மலையிலும் சென்ற ஆண்டு ஜூலையில் பறவையாளர் ரவிந்தரன் அவர்களும் இப்பூச்சியை பார்த்து ஆவணப்படுத்தியுள்ளார்.

திரு.ரவிந்தரன் அவர்களின் புகைப்படம்


எனவே மதுரையின் மலைகளில் அபூர்வமாக இப்பூச்சியை காண வாய்ப்புள்ளதாக பூச்சி ஆர்வலர்கள் நம்புகின்றனர்.     
பசல்ஸ் (puzzles and alternate reality game ) அதாவது புதிர் விளையாட்டு போட்டிக்கான கம்பெனியான சீசிடா  (cicada ) கம்பெனியானது தனது லோகோ வாக (அதாவது இலச்சனையாக) மண்டையோட்டுப்பூச்சியையே வைத்துள்ளது.

இலக்கிய உலகில் மண்டையோட்டு அந்துப்பூச்சி

இப்பூச்சி எழுப்பும் ஓசை (சுண்டெலியின் ஓசை போன்று) மிகுந்த த்ரிலிங்கான பயத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். ஏண்டா! சுண்டெலியின் சவுண்ட்டுகலாமா  பயப்படுவீக! . மேலும் பலநாடுகளில் இப்பூச்சியை பார்ப்பது மிகுந்த அபசகுணமாக கருதுகின்றனர். இது பேய்கள் ஏவிவிடும் ஏற்பாடு என்று பலரும் கருதுகின்றனர். இது போததா நமது இலக்கிய அன்பர்களுக்கு வச்சி செஞ்சூரமாட்டாங்க. முதல் கதை லண்டன் மாநகரில் மன்னர்  சார்லஸ் இப்பூச்சியை கண்டதாலேயே கொல்லப்பட்டதாக  ரீல் விடப்படுகின்றது. மேலும் ஜெர்மானிய, ஜப்பானிய இலக்கிய வாதிகள் பல பேய் கதைகளின் மூலமாக இப்பூச்சியையே கொண்டு எழுதியுள்ளனர். 2015 தைவான் திகில் படம் ( The Tag-Along ) ல் மண்டையோட்டு அந்துப்பூச்சியே முக்கிய பங்கு வகிக்கின்றது. எட்கர் ஆலன் போ என்ற சிறுகதையில் டிராகுலா வருவதற்கு முன்பு நம் அந்துப்பூச்சியே வந்து பயங்கொள்ளச் செய்கின்றதுபிரபல   The Silence of the Lambs  என்ற பெயரில் நாவலும் அதை தொடர்ந்து திரைப்படமும் வெளிவந்து நம் அந்துப்பூச்சியே கதையின் நாயகனாக கொண்டு சிறப்பான வசூலை ஹாலிவுட்டில் செய்தனசென்ற கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல் கோலிவுட் கடவுளின் நிலைக்கே சென்றதாக கூறியதற்கு காரணத்தை விளக்கிவிடுவோமா? பலரும் அதற்கு முதலில் விடை கூறுங்கள் என தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர். சரி சொல்லிருவோமா? அழகிய அந்துப்பூச்சிகள் திகில் ஏற்படுத்தும் மண்டையோட்டுடன் படைக்கப்பட்டு இருப்பது முக்கிய கதாநாயகிகளே பேய்களாக நடிப்பதை இணைத்தே அவ்வாறு கூறினேன்மேலும் உலகெங்கும் நடைபெறும் ஜூலை 22 முதல் 30 வரை தேசிய அந்துப்பூச்சி வாரமாக ( National Moth Week 2017 )    கொண்டாடப் படுகின்றது. எந்த உயிரினத்தையும் பார்ப்பதால் மனிதர்களுக்கு அபசகுணம் வந்து விடாது. பல உயிரினங்களை மனித கண்கள் பார்த்த பின்பு தான் அந்த இனங்களின் அழிவுகளே துவங்குகின்றன என்ற செய்தியுடன்  பயணங்களால் பல்லுயிர்கள் பார்ப்போம். பல்லுயிர்களைப்  பாதுகாப்போம்.

                                         வஹாப் ஷாஜஹான்,எம்..,

                                                 9942522470  
                                                திருமங்கலம். மதுரை.

3 comments:

  1. பூச்சிகள் உலகத்தில் மண்டையோட்டு அந்துபூச்சி பற்றிய புதிய தகவல்களுக்கு நன்றி. நீங்கள் எடுத்த (முதல் பதிவில் பகிர்ந்த ) மண்டை ஓட்டுப்பூச்சியின் படத்தை கட்டுரையின் துவகத்தில், ஆரம்பத்தில் இணைத்திருந்தால் இக்கட்டுரைக்கு இன்னமும் நன்றாக இருந்திருக்கும். தொடரட்டும் உங்கள் தேடல் பயணம். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி தம்பி

      Delete